Inandoutcinema - Tamil cinema news

அந்த சம்பவத்தைக் கேள்வி பட்டு மனசு உடஞ்சிட்டேன் – நடிகை திரிஷா

இயக்குனர் ரமணா மாதேஷ் மிரட்டல் படத்திற்கு பிறகு சிறிது காலம் தமிழ் சினிமாவை விட்டு விலகி இருந்தார். தற்போது மீண்டும் தமிழ் திரையுலகில் கால் பதித்த இவர், நடிகை த்ரிஷாவை வைத்து மோகினி திரைப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். மோகினி படம் வரும் 27-ம் தேதி வெளிவரவுள்ளது. இந்த படத்தில் த்ரிஷா, யோகி பாபு, சுகன்யா, கவுசல்யா, முகேஷ் திவாரி, சாமிநாதன், கணேஷ் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று காலை நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் முன்னணி பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் மோஹினி படத்தைப் பற்றி நடிகை திரிஷா கூறியதாவது : முதன் முறையாக இரட்டை வேடத்தில் நடிச்சிருக்கேன், வைஷ்ணவி, மோகினினு இரண்டு கதாபாத்திரத்தில் நடிச்சிருக்கேன். இரண்டுமே என் ஃபேவரைட்டு கதாபாத்திரங்களாக இருந்தாலும் சவாலானது மோகினிதான்.

படத்தில் ஆக்‌ஷனுக்காக பல ஸ்டன்டுகளை டூப் இல்லாமல் நடிச்சிருக்கேன். மேலும் சென்ற வாரம் சென்னையில் நடந்த கொடூர பலாத்கார சம்பவத்தைப் பற்றி பேசினார். அப்போது அவர் கூறியதாவது ; இது நிச்சயமாக கண்டிக்கப் பட வேண்டியது. அந்த சம்பவத்தைக் கேட்டு மனசு உடஞ்சிட்டேன். இந்த மாதிரி விஷயங்கள் நடக்கும்போது மனசுக்கு ரொம்ப வேதனையா உள்ளது. குறிப்பாக அதில் குழந்தைகள் பாதிக்கப்படும்போது ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது என கூறினார்.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news