விஜய் தேவரகொண்டா காதல் நாயகன் என்ற முத்திரையை நோட்டா திரைப்படம் உடைக்கும் – சாம் சிஎஸ்

ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம்தான் நோட்டா ஆகும். நோட்டா திரைப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். விஜய் தேவரகொண்டா, சத்யராஜ், நாசர், மெஹ்ரீன் பிர்ஸாடா, எம் எஸ் பாஸ்கர், பிரியதர்ஷி ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் இந்த NOTA படத்துக்கு சந்தான கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

அருவி புகழ் ரேமண்ட் டெரிக் கிராஸ்டா படத்தொகுப்பாளராகவும், டிஆர்கே கிரண் மற்றும் எஸ் எஸ் மூர்த்தி ஆகியோர் கலை இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார்கள். இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான சாம் சிஎஸ் இசையமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இன்னிலையில் இந்த படத்தை பற்றியும் இந்த படத்தின் நடிகர் விஜய் தேவரகொண்டா பற்றியும் சாம் சிஎஸ் கூறியதாவது : கதை மற்றும் காட்சிகள் என்னை இன்னும் சிறப்பாக வேலை செய்ய உந்திய அதே நேரத்தில், விஜய் தேவரகொண்டாவின் திரை ஆளுமை என்னை இன்னும் அடுத்த கட்டத்துக்கு தள்ளியது.

மேலும், NOTA ஒரு தான் அவரின் காதல் நாயகன் என்ற முத்திரையை உடைத்து, நெருக்கமான, யதார்த்தமான கதாபாத்திரத்தில் அவரை முன்னிறுத்தியிருக்கும் முதல் படம். இது ஒரு இருமொழி திரைப்படமாக இருப்பதால், இரண்டு மொழி ரசிகர்களுக்கும் ஏற்ற வகையில் இசையமைக்க வேண்டியிருந்தது. அதை செய்திருக்கிறேன் என்று நம்புகிறேன் என இசையமைப்பாளர் சாம் சிஎஸ் கூறியுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news