காப்புரிமை வழக்கு தள்ளுபடி குறித்து அறிக்கை வெளியிட்ட இளையராஜா – விவரம் உள்ளே

தமிழ் திரையுலகில் முன்னணி முன்னணி இசையமைப்பளர்களில் ஒருவராக வளம் வருபவர்தான் இசைஞானி இளைராஜா ஆகும். 75 வயதை கடந்தும் இளம் ரசிகர்கள் விரும்பம் இசையை தந்து ஆச்சர்யப்படுத்துகிறார். இன்னிலையில் இளையராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் இன்று வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறியதாவது : நான் 2014ம் ஆண்டு தொடர்ந்த எனது பாடல்களை பயன்படுத்த தடை கோரிய வழக்கின்படி, இன்றளவும் எனது பாடல்களை பயன்படுத்த நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட தடை செல்லும். அந்த தீர்ப்பில் எவ்வித மாற்றமும் இல்லை. அதை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

அந்த வழக்கின் இறுதி தீர்ப்பு கூடிய விரைவில் வெளிவரும். நான் 2010ம் ஆண்டு எக்கோ நிறுவனத்தின் மீதும் அதன் உரிமையாளர் மீதும் போலீசில் புகார் அளித்தேன். சட்டத்துக்கு புறம்பாக என் பாடல்களை விற்பனை செய்வதாக அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸ் சிடிக்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர். அந்த குற்றவியல் நடவடிக்கை வழக்கை ரத்து செய்து செய்யக்கோரி அவர்கள் தொடுத்த வழக்கின் தீர்ப்பே நேற்று வெளிவந்தது.

அதில் நீதியரசர் எக்கோ நிறுவனத்தின் மீதான குற்றவியல் நடவடிக்கையை மட்டுமே ரத்து செய்துள்ளார். அதில் எனது காப்புரிமை செல்லாது என அறிவிக்கவில்லை. இந்த வழக்குக்கும் எனது பாடல்களின் உரிமை மீதான வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஒரு சில செய்தி நிறுவனங்கள் இளையராஜா பாடல்கள் வழக்கு ரத்து என்றும், சில இளையராஜா காப்புரிமை வழக்கு தள்ளுபடி என்றும் முன்னுக்கு பின் முரணான செய்திகளை வெளியிடுகின்றனர்.

நான்கு ஆண்டுகள் வழக்கு நடத்தி இறுதி தீர்ப்புக்காக காத்திருக்கும் நிலையில் இது போன்ற உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். அவ்வாறு தவறான செய்தி வெளியிடுவோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் மற்றும் நஷ்டஈடு கோரி வழக்கு தொடரப்படும். ஏற்கனவே தவறான செய்தி வெளியிட்டவர்கள் இந்த மறுப்பையும் வெளியிட கோருகிறோம் என இசைஞானி இளைராஜா கூறியுள்ளார்.

 

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news