ராட்சசன் கதையை கேட்கும்போதே என் மனதில் இசைக்குறிப்புகள் ஓடியது – ஜிப்ரான்

புதுமுக இயக்குனரான ராம் குமார் இயக்கத்தில் 2014ஆம் ஆண்டு வெளியான தமிழ் நகைச்சுவைத் திரைப்படம்தான் முண்டாசுப்பட்டி ஆகும். இந்தத் திரைப்படத்தில், விஷ்ணு, நந்திதா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அதன் பிறகு நான்கு வருட இடைவெளிவிட்டு மீண்டும் நடிகர் விஷ்ணு விஷாலுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

ராட்சசன் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் விஷ்ணு விஷால், அமலா பால், முனீஷ்காந்த், சுசானே ஜார்ஜ், காளி வெங்கட் மற்றும் முக்கிய நடிகர்கள் பலர் நடித்துள்ள இந்த ராட்சசன் திரைப்படம் வரும் அக்டோபர் 5ஆம் தேதி [நாளை] உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. ஜி.டில்லிபாபு மற்றும் ஆர்.ஸ்ரீதர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இன்னிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் பாடல்கள் மற்றும் பின்னணி இசையை பற்றி கூறியதாவது : எந்த ஒரு படத்திலும் பாராட்டு எந்த அளவுக்கு வருகிறதோ, அந்த அளவுக்கு பொறுப்பும் என் தோள்களில் வந்து சேர்கிறது. மக்கள் என் பின்னணி இசையை அதிகம் கவனிக்கத் தொடங்கியுள்ளனர்.

அதனாலேயே படத்தை தேர்வு செய்வதில் நான் அதிகம் கவனம் செலுத்த வேண்டியதாகி விட்டது. உண்மையில், எந்த ஒரு இயக்குனரும் எனக்கு ஒரு கதை சொல்லும்போது, அதில் பின்னணி இசைக்கு எந்த அளவுக்கு வாய்ப்பு இருக்கிறது என்பதை கவனிப்பேன்.

சில நேரங்களில், அது என் கருத்துக்கு ஆதரவாகவும், ஒரு சில நேரங்களில் முரண்பாடாகவும் இருந்திருக்கின்றன. ஆனால், ராட்சசன் கதையை கேட்கும்போதே என் மனதில் இசைக்குறிப்புகள் ஓடியது. கதையை கேட்கும்போது பின்னணி இசையில் நிறைய சவால்கள் இருப்பதை நான் உணர்ந்தேன் என ஜிப்ரான் கூறியுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news