தல பொங்கலுக்காக ரசிகர்களுடன் சேர்ந்து நானும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறேன் என கூறும் பிரபலம்

சிவா இயக்கத்தில் தல அஜித்குமார் நடித்து வரும் படம் விஸ்வாசம். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் விவேக், தம்பிராமய்யா, கோவை சரளா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்தின் சூட்டிங் சென்னை, ஹைதிராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து வந்தது. சத்யஜோதி பிளிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன் தயாரிக்கிறார்.

இசை டி.இமான், வெற்றி ஒலிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் மூலம் இமான் முதல்முறையாக அஜித் படத்துக்கு இசையமைத்துள்ளார். ரூபன் எடிட் செய்கிறார். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் விவேக், யோகி பாபு, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இதில் படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கலுக்கு வெளியாக உள்ள இப்படத்தின் அப்டேட்டிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இன்னிலையில் சமீபத்தில் டி.இம்மான் அவர்கள் அளித்துள்ள பேட்டி ஒன்றில் விஸ்வாசம் பற்றிய அப்டேட்களை கொடுத்துள்ளார். அது ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. அதாவது தல படம் என்றாலே BGM தான் முக்கியம்.

இந்த படத்துலயும் பக்காவாக BGM தயாராகி வருது. இதுவரைக்கும் இரண்டு பாட்டு ரெடியாகி இருக்கு. மாஸான ஆல்பம் ரசிகர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. ஒரு தலையா இருந்தா கூட சமாளிக்கலாம். இரண்டு தலைக்கு மியூசிக் போடுறது சவாலாக இருக்கிறது. மேலும் தல பொங்கலுக்காக ரசிகர்களுடன் சேர்ந்து நானும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறேன் என இசையமைப்பாளர் டி இமான் கூறியுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news