பாலியல் குற்றச்சாட்டுகளால் அதிர்ச்சியில் உள்ள இசைப்புயல்

சென்னை: இந்தியா முழுவதும் பல்வேறு துறைகளில் பெண்கள் தங்கள் பணியிடங்களில் நடந்த பாலியல் கொடுமைகள் குறித்து சமூக வலைத்தளங்களில் “மீ டு” இயக்கம் மூலம் துணிச்சலாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக சினிமாதுறையில் நடிகை அமலாபால், தனுஸ்ஸ்ரீ தத்தா, பாடகி சின்மயி உள்பட பல பெண்கள் பிரபலங்கள் மீது அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த குற்றச்சாட்டுகளில் கவிஞர் வைரமுத்து முதல் நடிகர் அர்ஜுன் வரை சிக்கியுள்ளனர். இதுகுறித்து பலர் எதிர்மறை விமர்சனங்களும் செய்து வருகின்றனர். இந்நிலையில், பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹமான் “மீ டு” விவகாரம் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் டிவிட்டரில் கூறுகையில்; “மீ டு” பிரச்னைகளை கவணித்து வருகிறேன். இதில், பாதிக்கப்பட்டவர்கள், குற்றம்சாட்டப்படுபவர்கள் சில பெயர்கள் கேட்கும் போது அதிர்ச்சி அளிக்கின்றன. நமது சினிமா துறை பெண்களை மதிக்கும் துறையாகவும், சுத்தமாகவும் இருக்க விரும்புகிறேன்.

நானும் எனது குழுவும், அனைவரும் பாதுபாப்பாகன சூழ்நிலையை உறுவாக்கிகொடுத்து அவர்களிடம் இருந்து சிறந்ததை பெற கடைமைப்பட்டுள்ளேன். பாதிக்கப்பட்டவர்களின் குரல் ஓங்கி ஒலிக்க சமூக வலைதளங்கள் பெரும் சுதந்திரத்தைக் கொடுத்துள்ளன. ஆனால் அதே நேரத்தில் அதை வைத்துமட்டுமே நாம் எந்த முடிவும் எடுத்துவிட விடமுடியாது. அதை தவறாக பயன்படுத்தவும் வாப்புள்ளது. இவ்வாறு கூறியுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news