பேட்ட படத்தை பற்றி லேட்டஸ்ட் அப்டேட் வெளியிட்ட அனிருத் – காணொளி உள்ளே

திரைத்துறையில் இருக்கும் பிரபலங்கள் பலரும் பாலியல் சர்ச்சையில் சிக்கி வருவது அனைவரும் அறிந்ததே. இதில் தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலன்களான நடிகர் தனுஷ், ராகவா லாரன்ஸ், சுந்தர் சி, ஏ.ஆர்.முருகதாஸ் உட்பட பலர் சிக்கியுள்ளனர். அந்த வகையில் #MeToo விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக, தமிழகத்தில் கவிஞர் வைரமுத்து, இயக்குநர் சுசி கணேசன், நடன இயக்குநர் கல்யாண், நடிகர் ஜான் விஜய் ஆகியோர் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

தற்போதைய சூழலில் உலகளவில் அதிக கவனத்தை பெற்று வரும் ME-TOO பரப்புரைக்கு இசையமைப்பாளர் அனிருத் ஆதரவு தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, ME-TOO பரப்புரையை தாம் வரவேற்பதாகவும், பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்ந்து இதுகுறித்த புகார்களை தெரிவிக்க வேண்டும் என கூறினார்.

மேலும், வழக்கு நிரூபிக்கப்பட்டால் தவறு செய்தவர்களின் உண்மை முகம் வெளிப்படும் எனவும் அனிருத் தெரிவித்தார். மேலும் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும், பேட்ட திரைப்படம் குறித்த கேள்விக்கு, வெளியாகவிருக்கும் எனது அடுத்த ஆல்பம் பேட்ட திரைப்படம்தான். இன்னும் இரண்டு மாதங்களில் பேட்ட திரைப்படத்தின் பாடல் வெளியிடப்படும் என இசையமைப்பாளர் அனிருத் கூறியுள்ளார். இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news