September 19, 2018
Inandoutcinema - Tamil cinema news

500வது போட்டியில் கலந்துகொள்ளும் தல தோணி. விவரம் உள்ளே

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் மான்செஸ்டரில் நடந்த முதலாவது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை எளிதில் வீழ்த்தியது.இந்த நிலையில் இந்தியா–இங்கிலாந்து அணிகள் மோதும் 2–வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கார்டிப்பில் பகல்-இரவு ஆட்டமாக இன்று நடக்கிறது.

இந்திய அணி இந்த போட்டியையும் வென்றால் 2 க்கு 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றும். ஆனால், இங்கிலாந்து அணி முதல் போட்டியில் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுக்க காத்திருக்கிறது. தொடரை கைப்பற்ற இந்திய அணியும் தொடரை இழக்காமல் இருக்க இங்கிலாந்து அணியும் போராடும் என்பதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்பான ஆட்டத்தை எதிர்பார்க்கலாம்.

இந்திய அணியின் நட்சத்திர வீரர் தோனி, இன்று சர்வதேச கிரிக்கெட்டில் 500வது போட்டியில் பங்கேற்கிறார். மேலும், நாளை தோனி பிறந்த நாள் என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு தல தோனியின் மீது அதிகமாக இருக்கிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news