September 20, 2018
Inandoutcinema - Tamil cinema news

அப்பாக்கூட வேலை பார்த்தவங்க அப்பாவைப்பத்தி அப்படி இப்படினு சொன்னாங்க – கௌதம் கார்த்திக்

தீராத விளையாட்டு பிள்ளை, நான் சிகப்பு மனிதன், சமர் படங்களுக்கு பிறகு இயக்குனர் திரு இயக்கியுள்ள படம் மிஸ்டர் சந்திரமவுலி ஆகும். முதல் முறையாக நவரச நாயகன் கார்த்திக், அவரது மகன் கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்தில் ரெஜினா கஸாண்ட்ரா, சதிஷ், வரலக்ஷ்மி, இயக்குநர் மகேந்திரன், இயக்குநர் அகத்தியன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜூலை 6-ம் தேதி இப்படம் வெளிவரவுள்ள உள்ளது. இந்நிலையில் கௌதம் கார்த்திக் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நடிகர் கௌதம் கார்த்திக் கூறியதாவது : இப்படம் எனக்கு மறக்க முடியாத ஒரு படமாக அமைஞ்சுது. அப்பாவுடன் நடிக்குறதுக்கான வாய்ப்பு கிடச்சுது. எனது முந்தையப் படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டுகளில் அப்பாக்கூட வேலை பார்த்தவங்க அப்பா இப்படி பண்ணுவார், அப்பா வந்தா கலகலன்னு இருக்கும், அப்பா அப்படி, அப்பா இப்படினு சொல்லிக்கிட்டே இருப்பாங்க.

நான் சின்ன வயசுல இருந்து ஊட்டியிலேயே வளர்ந்தேன். அதனால வருஷத்துக்கு ஒரு முறைதான் அப்பாவை பார்க்கமுடியும். அப்படி இருந்த நிலையில், எனக்கு அவரைப் பத்தியும் இந்த சினிமா துறையைப் பத்தியும் பெருசா தெரிஞ்சிக்க முடியல. கடல் படத்து ஷூட்டிங்கலதான் எனக்கு அப்பாவுக்கும் நல்ல நெருக்கம் ஏற்பட்டுச்சு.

அதுக்குப் பிறகு இந்தப் படத்தில் ஒண்ணா சேர்ந்து நடிக்கும்போதுதான் எனக்கு அப்பாவை ஒரு சக நடிகராய் பார்க்க முடிஞ்சது. அவரைப் பத்தி மத்தவங்க சொன்ன எல்லாத்தையும் உணர முடிஞ்சது. அவரு எனக்கு அப்பான்னு இதெல்லாம் சொல்லல. உண்மையிலேயே ஒரு சக நடிகரா கார்த்திக்கிட்ட எப்படி எல்லாரையும் பாத்துக்கணும், சந்தோஷமா வச்சிக்கணும்னு கத்துக்கிட்டேன் என நடிகர் கௌதம் கார்த்திக் கூறியுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news