Category: Trailer

அதிரடி சண்டைக் காட்சியில் அசத்தும் வரலக்ஷ்மி..!

மனோஜ் குமார் நடராஜன் இயக்கத்தில் வரலட்சுமி நடித்துள்ள வெல்வட் நகரம் திரைப்படம் வரும் 6ம் தேதி ரிலீசாகிறது. இந்நிலையில் அவரது நடிப்பில் உருவாகியுள்ள மற்றொரு படமான ராஜபார்வை திரைப்படத்தின் டிரெய்லர் ரிலீசாகியுள்ளது. ஜேகே இயக்கியுள்ள இந்த படத்தில் கண் பார்வையற்ற பெண்ணாக வரலட்சுமி நடித்துள்ளார். ஆனாலும் இந்த படத்தில் அவர் ஆக்ஷன் காட்சிகளில் அதிரடி கிளப்பி இருக்கிறார். டிரெய்லரிலேயே பல ஆண்களை அடித்து துவம்சம் செய்கிறார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. டிரெய்லரை பார்த்த நெட்டிசன்கள் […]

ஜேம்ஸ் பாண்ட் தமிழ் ட்ரெய்லர்!

உலகமெங்கும் உள்ள ஹாலிவுட் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜேம்ஸ் பாண்ட் பட தமிழ் ட்ரெய்லர் இன்று வெளியானது. நாவல் கதையாக தொடங்கி, காமிக்ஸ் தொடராக வளர்ந்து திரைப்படமாக உயிர்பெற்ற கதாப்பாத்திரம் ஜேம்ஸ் பாண்ட். இயான் ப்ளெமிங் எழுதிய இந்த கதை 1962ல் முதன்முறையாக திரைப்படமாக வெளிவந்தது. ஷான் கொனெரி நடிப்பில் வெளிவந்த ‘டாக்டர்.நோ’ திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு இதுவரை 24 படங்கள் ஜேம்ஸ் பாண்ட் கதாப்பாத்திரத்தை வைத்து உருவாகியுள்ளன. இந்த பட வரிசையில் அடுத்த வருடம் 25வது படமாக “நோ […]

ரியோ ராஜ் நடிக்கும் “பிளான் பண்ணி பண்ணனும்” பட டீசர் இதோ!

சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இளைஞர்களிடம் ஃபேமஸானவர் ரியோ ராஜ். அதில் கிடைத்த புகழை வைத்து சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து இல்லத்தரசிகளிடையேயும் படு பாப்புலர் ஆனார் ரியோ. அதையடுத்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கடந்த ஜூன் மாதம் வெளியானநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தில் ஹீரோவாக களமிறங்கினார். ஓரளவிற்கு ஓடி ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்ற அப்படத்தை தொடர்ந்து தற்போது இன்னொரு இன்னிங்ஸை துவங்கியுள்ளார் ரியோ.   பாசிட்டிவ் பிரிண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ரோபோ […]

ஆக்‌ஷன் போலீசாக சிபிராஜ் – வால்டர் ட்ரைலர் ரிலீஸ்!

சிபிராஜ் முதன்முறையாக ஆக்‌ஷன் போலீஸ் கதாப்பாத்திரத்தில் நடிக்கும் படம் வால்டர். இதற்கு முன்னர் ‘நாய்கள் ஜாக்கிரதை’, ‘சத்யா’ போன்ற போலீஸ் சார்ந்த படங்களில் சிபிராஜ் நடித்திருந்தாலும், போலீஸ் உடுப்பில் கட்டை மீசையோடு ஒரு ஆக்ரோஷமான போலீஸாக சிபிராஜ் நடிக்கும் முழு முதல் போலீஸ் படம் வால்டர். உண்மை சம்பவங்களை தழுவிய கதைகள் இப்போது பரவலாக கவனம் பெற்று வரும் நிலையில் இந்த படமும் குழந்தைகள் கடத்தல் குறித்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு  உருவாகியுள்ளது.  இப்படத்தில் சிபிராஜுடன் […]

சமுத்திர கனி ஹீரோவாக நடித்துள்ள சங்கத்தலைவன் ட்ரைலர்!

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த தயாரிப்பாளர்களில் ஒருவரான வெற்றிமாறன் தயாரிப்பில் சமுத்திரகனி சங்கத்தலைவன் என்ற சமுதாய அக்கறைகொண்ட படத்தில் நடித்துள்ளார். சமூகத்தில் நடக்கும் அவலங்களை எதிர்த்து மிகச்சிறந்த தரமான படங்களை கொடுக்கும் சமுத்திர கனி ஹீரோவாக நடித்துள்ள சங்கத்தலைவன் படம்  தொழிலாளர்களுக்காக முதலாளிகளை எதிர்த்து நியாயத்தை தேடும் படமாக உருவாகியுள்ளது.   வெற்றி மாறன் தயாரித்துள்ள இப்படத்தில் சமுத்திர கனியுடன் விஜே ரம்யா, கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். போராட்டம், அரசாங்க எதிர்ப்பு உள்ளிட்டவற்றை உள்ளடக்கி உருவாகியுள்ள இப்படத்தை […]
Page 2 of 45«12345 » 102030...Last »
Inandoutcinema Scrolling cinema news