மோகன்லாலின் ஒடியன் – விமர்சனம்

மோகன்லால் நடித்து மலையாளத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் ஒடியன். கேரளாவில் வாழந்த மலைவாழ் இனத்தினர்களை பற்றிய கதை. ஒடியன் என்பவர்கள் விலங்குகளாக உருவெடுக்கும் அமானுஷ்ய சக்தி பெற்றவர்கள் என கட்டுகதைகள் உண்டு. அவர்கள்  விலங்குகளை போல வேடமணிந்து  ஆட்டக்கலை செய்பவர்கள்.  ஆனால் அந்த கலையை அவர்கள் இரவு நேரங்களில் எதிரிகளை பயமுறுத்த பயன்படுத்துவார்கள் என்பது உண்மைக்கதை.

இந்த படத்தில் ஒடியன் மாணிக்கமான மோகன்லாலின் மீது அனைவருக்கும் பயம். அங்கு நடந்த கொலைகளுக்கு அவந்தான் காரணம் என அனைவரும் நினைக்கின்றனர். ஆனால் அந்த ஊரின் பண்ணையாராக வரும் பிரகாஷ்ராஜ் தனது தேவைகளுக்கு தடையாக இருப்பவர்களை கொலைசெய்கிறார். அதற்கு ஒடியனின் பெயரை பயன்படுத்துகிறார். அந்த பழியை ஒடியன் மீது போடுகிறார். இதனால் அனைவராலும் வெறுக்கப்படும் ஒடியன் எப்படி பிரகாஷ்ராஜின் முகத்திரையை கிழித்து அவன் மீது உள்ள கலங்கத்தை போக்குகிறான் என்பதுதான் படத்தின் கதை.

படத்தின் இயக்குநர் ஸ்ரீகுமார் மேனன். ஒடியன் என்ற ஒரு விஷயத்தை படத்திலிருந்து எடுத்துவிட்டால், இது சாதாரண வில்லனை பழிவாங்கும் ஹீரோவின் கதையாக மட்டுமே இருக்கும்.  ஒடியன் என்ற இனத்தவரின் வாழ்க்கையை அழகான வாழ்வியலாக காண்பிருத்திருந்தால் கூட கதைக்களம் புதிதாக இருந்திருக்கும். ஆனால் இவரது திரைக்கதை அதை கொடுக்க தவறியுள்ளது. முதல் பாதியில் இருக்கும் விறுவிறுப்பு இரண்டாவது பாதியில் இல்லை. இன்னும் படத்தின் நீளத்தை குறைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

மோகன்லால் நடிப்பில் கைதேர்ந்தவர். ஆனால் அவரே இந்த கதாபாத்திரத்தில் ஒட்டவில்லையோ என நினைக்க தோன்றுகிறது. ஊரே பார்த்து பயப்படும் ஒடியன் மீது நமக்கு ஏனோ பயம் வரவில்லை.

பிரகாஷ்ராஜின் மேக்கப்பும் அவரது இயல்பான கேரக்டரை தாண்டி செயற்கையாக இருக்கிறது. மஞ்சுவாரியர் மற்றும் மீனாக்‌ஷியாக வரும் சனா அல்தாப் நடிப்பு பாராட்டும் படி இருக்கிறது.

ஒளிப்பதிவு ஷாஜி குமார், இசை சாம்.சிஎஸ் மற்றும் ஜெயசந்திரன் அவர்கள் பணியை செம்மனே செய்துள்ளனர். நீளத்தை குறைத்து ஒடியன் பற்றிய வாழ்க்கை முறையை இன்னும் அதிகமாக காட்டியிருந்தால் படம் அதிகம் ரசிக்கும் படியாக இருந்திருக்கும் என்ற எண்ணம் தோன்றுகிறது.

ஒடியன் : வெளிச்சம் குறைவு

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news