September 25, 2018
Inandoutcinema - Tamil cinema news

கோலிக்கு பதிலளிக்கும் மோடி தமிழர்களை புறக்கணிக்க காரணம் என்ன ?

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் முன்னெடுத்த போராட்டம் 100-ஆவது நாளை எட்டியது. போராட்டத்தின் மீது மத்திய , மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்க இன்று முழு அடைப்பு போராட்டமும் நடத்தப்பட்டது. அப்போது தூத்துக்குடி ஆட்சியரகத்தை முற்றுகையிட பேரணியாக மக்கள் செல்ல முடிவு செய்தனர். ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, தூத்துக்குடி ஆட்சியர் அலுவலக வளாகத்தை 18 கிராம மக்கள் முற்றுகையிட முயன்றனர். அப்போது மக்கள் மீது கோர தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால பலர் பாதிக்கப்பட்டனர். அங்கு நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு வரும் 27-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் 4 ஆவது நாளாக இன்றும் பேருந்துகள் இயக்கப்படவில்லை. தூத்துக்குடி முழுவதும் உள்ள கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. உடல்நலனில் அக்கறை கொள்ள வேண்டும் என்ற நோக்கில் மத்திய அமைச்சர் ராஜ்யவர்த்தன் ரத்தோர் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டு, அதை ஒரு சவலாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு விடுத்தார். அந்த சவாலை ஏற்றுக்கொண்ட விராட் கோலி, தான் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டு, அந்த சவாலை, நடிகையும் தனது மனைவியுமான அனுஷ்கா ஷர்மா மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்டோருக்கு விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி, தனது உடற்பயிற்சி வீடியோவை விரைவில் வெளியிட உள்ளதாக கோலிக்குப் பதில் அளித்துள்ளார். இது நெட்டிசன்களைக் கொதிப்படையச் செய்துள்ளது. விராட் கோலிக்குப் பதில் சொல்ல நேரமிருக்கும் உங்களுக்கு, நாட்டு மக்கள் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் கருத்துத் தெரிவிக்க நேரமில்லையா என்று பலரும் கேள்விக்கணைகளைத் தொடுத்து வருகின்றனர். இதனால் மோடியின் மீது தமிழக மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news