Inandoutcinema - Tamil cinema news

எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த நடிகர் கமல் – விவரம் உள்ளே

கடந்தவாரம் வந்த கஜா புயல் டெல்டா மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் முழுவதையும் அழித்தொழித்தது. இதனால் அம்மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியானது. உணவு, தண்ணீர், மின்சாரம், இருப்பிடம் இன்றி தவித்து வருகின்றனர். இவர்களுக்கு, தன்னார்வலர்களும் மற்றும்ம் திரை பிரபலங்கள் பலரும் தங்களால் ஆனா உதவிகளை செய்து வருகின்றனர்.

கஜா புயல் கோர தாண்டவம் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செவ்வாய்க்கிழமை ஹெலிகாப்டரில் ஆய்வு செய்ய சென்றார். குறிப்பிட்ட பகுதியில் ஆய்வு மேற்கொள்ளாமல் திடீரென தனது ஆய்வு பணியை நிறுத்திவிட்டு சென்றுவிட்டார். இது பெரும் விமர்சனங்களுக்குள்ளானது. இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிச்சாமி, தான் தாழ பறந்த படியே புயல் பாதிப்பு பகுதிகளை ஆய்வு செய்ததாக விளக்கினார்.

இந்நிலையில் இன்று காலை நடிகர் கமல் ஹாசன் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடட டெல்டா மாவட்டங்களுக்கு சென்றுள்ளார். அப்போது அவர் ட்விட்டரில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து கருது பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது : தரையில் கால் பாவிட, மக்களோடு மக்களாக நின்று பார்த்தால், கேட்டால்… புரியும் சோகம், தெரியும் உண்மை! ஹெலிகாப்டரில் எவ்வளவு தாழப்பறந்தாலும் இவை தெரியாது. கேட்கிறதா அரசுக்கு? என கமல்ஹாசன் தமிழக அரசை விமர்சனம் செய்துள்ளார். இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news