September 22, 2018
Inandoutcinema - Tamil cinema news

நடிகர் ரஜினிகாந்திற்கு சரமாரியாக கேள்வி கேட்ட நடிகர் கமல்ஹாசன். விவரம் உள்ளே

மிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகராக வளம் வருபவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினியும், உலகநாயகன் கமல் ஹாசனும் ஆகும். இவர்கள் இருவரும் தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ளனர். இவர்களுக்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்புகள் மற்றும் ஆதரவுகள் இரண்டும் எழுந்து வருவது அனைவரும் அறிந்ததே.

இன்னிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது: தமிழகத்தில் ஊழல்கள் அதிகமாக இருப்பதால் தான் நான் கட்சியைத் தொடங்கி உள்ளேன்.

இதுவரை தமிழகத்தில் நடந்த ரெய்டு முலம் அகப்பட்ட பணமும், தங்க நகைகளும் என்ன ஆனது? அவற்றின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளன என்பதை பற்றி ஒரு பேச்சும் இல்லையே! வருமான வரிச் சோதனை நமக்காக நடப்பதாக வைத்துக்கொண்டாலும் அதில் என்ன நடப்பது என்பது தெரிவிக்க வேண்டாமா? தெரிவிப்பது கடமையில்லையா? கிணற்றில் போட்ட கல்லாக எத்தனை நாட்கள் இருக்க முடியும்.

வருமான வரித்துறை சோதனை கண் துடைப்பாக இருக்கலாம் என்று சந்தேகப்படும் அளவிற்கு வந்துவிட்டது.

இதை நிவர்த்தி செய்யவேண்டியது மத்திய அரசின் கடமையாகும். சேலம் எட்டுவழிச்சாலை திட்டத்தை ரஜினிகாந்த் ஆதரித்துள்ளார். அவர் மக்களிடம் முதலில் பேசவேண்டும். எட்டு வழிச் சாலை இல்லாததால் எங்கள் வாழ்க்கைத் தரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று யாராவது சொன்னார்களா ? சேலம்-சென்னைக்கு இடையே இந்த ஒரு சாலைதான் உள்ளதா? வெவ்வேறு பாதைகள் இருக்கின்றன.

அவைகள் இதைவிட குறைந்த செலவில் விரைந்து முடிக்க வழிகள் இருக்கின்றன. பல அரசியல் தலைவர்கள் கருத்துகளைச் சொல்லியிருக்கிறார்கள். அவற்றை எல்லாம் கேட்காமல் இப்படிதான், இது தான் என்று மக்களை வற்புறுத்த முடியாது என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news