September 23, 2018
Inandoutcinema - Tamil cinema news

மக்கள் நீதி மய்யத்தின் கொடியேற்ற விழாவில் கட்சியின் உயர்நிலை குழு உறுப்பினர்கள் அறிவிப்பு. விவரம் உள்ளே

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகராக வளம் வருபவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினியும், உலகநாயகன் கமல் ஹாசனும் ஆகும். இவர்கள் இருவரும் தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ளனர். இவர்களுக்கு தமிழகம் முழுவதும் எதிப்புகள் மற்றும் ஆதரவுகள் இரண்டும் எழுந்து வருவது அனைவரும் அறிந்ததே. இன்னிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்ய அலுவலகத்தில் கட்சி கொடியை ஏற்றி, நிர்வாகிகளை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்.

இதனையடுத்து அக்கட்சியின் தற்காலிக உயர்நிலைக் குழு கலைக்கப்பட்டது. 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரு நிர்வாகி வீதம் கமல்ஹாசனால் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் ஆணையத்தில் கட்சி அங்கீகாரம் கிடைத்த பின், முதல் முறையாக கட்சி கொடியேற்றும் விழா நடைபெற்று உள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராக கமல்ஹாசனும், துணை தலைவராக கு.ஞானசம்பந்தனும் செயல்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுச்செயலாளராக அருணாச்சலம், கட்சியின் பொருளாளராக சுரேஷ் ஆகியோர் நியமனம் செய்யபட்டு உள்ளனர். மக்கள் நீதி மய்யத்தின் உயர்நிலைக்குழு கலைக்கப்படுகிறது. உயர்நிலைக்குழுவில் இருந்தவர்கள் செயற்குழு உறுப்பினர்களாக செயல்படுவர். ஸ்ரீபிரியா, கமீலா நாசர், பாரதி கிருஷ்ணகுமார் மவுரியா, குமரவேல், சவுரிராஜன், தங்கவேலு, மூர்த்தி உள்ளிட்டோர் செயற்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news