Inandoutcinema - Tamil cinema news

புயல் பாதித்த மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு தள்ளி வைக்கப்படுமா? – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

ஈரோடு: கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு தள்ளி வைக்கப்படுமா என்று தமிழக பள்ளிக் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் உள்ளிட்ட நலதிட்டங்கள் வழங்கும் விழா இன்று காலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு நலதிட்டங்களை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழக அரசு மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு பள்ளிகல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்து வருகிறது. புதிய பாடத்திட்டத்தில் வரலாற்று பாடத்தில் ஆங்கிலேயர்களின் பெருமை அதிகம் இடம் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வரலாற்றை பொருத்தவரை தேசிய தலைவர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள் போன்றவர்களுடைய வரலாறும் இடம் பெற்றுள்ளது.

ஒரு கல்வி மாவட்டத்தில் இருந்து மற்ற கல்வி மாவட்டங்களுக்கு தேர்வு எழுந்த செல்லும் மாணவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. கல்வி மாவட்டங்கள் வெவ்வேறாக இருந்தாலும் மதிப்பெண்கள் வழங்குவதில் எந்த குறைபாடும் இருக்காது. கஜா புயல் பாதிக்கப்பட்ட மாவட்ட பள்ளிகளில் இதுவரை பாடங்கள் முடிக்கப்படாமல் உள்ளது. இதனால், அரையாண்டு தேர்வை தள்ளி வைப்பதில் சிரமம் உள்ளதாக துறை ரீதியாக கூறப்படுகிறது. இருப்பினும் அரசு பரிசீலனை செய்து வருகிறது.

திண்டிவணத்தில் தரமற்ற சைக்கிள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் போராட்டதால் மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் முதல்வருடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். வரும் ஜனவரி 1ம் தேதி முதல் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் தொடங்கப்படும். என்று அவர் கூறினார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news