Inandoutcinema - Tamil cinema news

சொதப்பிய மெஸ்ஸி. மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுத்த மரடோனா

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டத்தில், அர்ஜெண்டினா 0-3 என்ற கோல் கணக்கில் குரோஷியாவிடம் படுதோல்வியடைந்தது. இதன் காரணமாக அர்ஜெண்டினா அணியின் தலைவரான மெஸ்சி கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார். மெஸ்சி, சர்வதேச தொடரில் சிறப்பாக விளையாடியது கிடையாது என்ற மோசமான வரலாறு இந்த தொடரிலும் தொடர்கிறது. இவருக்கு போட்டி வீரராக கருதப்படும் போர்த்துகலின் ரொனால்டோ இந்த தொடரில் 4 கோல்கள் அடித்துள்ளார். ஆனால், மெஸ்சி இன்னும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. அர்ஜெண்டினா அணி சுவிட்சர்லாந்திடம் 1-1 என டிராவும், குரோஷியாவிடம் 0-3 என தோல்வியும் கண்டுள்ளது. இந்த தலைமுறையின் GOAT யார் என்ற போட்டி ரொனால்டோவிற்கும், மெஸ்சிக்கும் இடையே நிலவி வருகிறது.இன்னிலையில், மெஸ்சின் சொதப்பலான ஆட்டத்தினால் அவரது ரசிகர்கள் அதிருப்தியடைந்து, அவர் GOAT அல்ல Sheep என்று டிவிட்டரில் கிண்டல் செய்து வருகின்றனர். அர்ஜென்டினா குரோஷியா அணியிடம் மோசமான தோல்வி அடைந்ததை நேரில் பார்த்த முன்னர் அர்ஜென்டினா கால்பந்தாட்ட வீரர் மரடோனா கண்ணீர் விட்டு அழுதது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news