September 20, 2018
Inandoutcinema - Tamil cinema news

சீனாவில் 10ஆயிரம் திரையரங்கில் வெளியாகும் மெர்சல் திரைப்படம் – விவரம் உள்ளே

நடிகர் விஜய் மற்றும் அட்லீ கூட்டணியில் இரண்டாவது முறையாக வெளியான படம் மெர்சல். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இப்படம் உலகளவில் பல நாடுகளிலும் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது. 120 கோடி ரூபாய் பொருட்செல்வில் உருவான இப்படம் இதுவரை 250 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

மெர்சல் திரைப்படம் உலகளவில் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல விருதுகளை பெற்றது. சமீபத்தில் கூட International Achievement Recognition Awards,ல் (IARA) உலகளவிலான சிறந்த நடிகருக்கான பிரிவில் ஹாலிவுட் நடிகர்களின் பெயர்களுடன் மெர்சல் படத்திற்காக நடிகர் விஜயின் பெயர் இடம்பெற்றது.

இதையடுத்து, மெர்சல் திரைப்படத்தை சீனாவில் வெளியிட படத்தின் தயாரிப்பாளர் தரப்பு முடிவு செய்யப்பட்டு, சீன மொழியில் மெர்சல் திரைப்படத்தை டப்பிங் செய்வதற்கான பணிகள் துவங்கி நடந்து வருகிறது. இந்த வருட இறுதியில் டிசம்பர் 6ல் சீனாவில் படம் வெளியாகிறது.

இந்தியாவிலிருந்து சில பாலிவுட் படங்களும் பாகுபலி படமும் மட்டுமே சீனாவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் தமிழ் படங்கள் எதுவும் இதுவரை சீனாவில் வெளியாகவில்லை. எனவே மெர்சல் படம் சீனாவில் வெளியாகும் முதல் தமிழ்த் திரைப்படம் எனும் பெருமையை பெற்றுள்ளது.

இதில் ஆச்சரியம் என்னவெனில் சீனாவில் 10,000 திரையரங்குகளில் மெர்சல் வெளியாகவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மெர்சல் படம் சீனாவில் அதிக வசூலை ஈட்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news