September 24, 2018
Inandoutcinema - Tamil cinema news

100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து பிரம்மாண்ட சாதனை படைத்த மெர்சல் பாடல்

நடிகர் விஜய் எ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் சர்கார் படத்தில் நடித்துவருகிறார். கத்தி துப்பாக்கி படத்தை தொடர்ந்து விஜய் மூன்றாவது முறையாக முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துவருகிறார். படத்தை வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இரவு பகலாக வேலை செய்துவருகிறார் இயக்குனர் முருகதாஸ். இதில் நடிகை வரலக்ஷ்மி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் படத்தில் அரசியல் வில்லனாக நடிகர் ராதாரவி மற்றும் பழ கருப்பையா நடித்து வருகிறார். மெர்சல் படத்தை தொடர்ந்து இந்த படத்திற்கு ரகுமான் இசையமைத்து இருக்கிறார்.

கடந்த வருடம் வெளியான மெர்சல் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆளப்போறான் தமிழன் பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. இன்னிலையில் இந்த பாடல் காணொளி மற்றும் வரிகள் [லிரிக்ஸ்] காணொளி பாடல் சேர்த்து 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடிவருகின்றனர்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news