மெகா ஆகாஷ் சொந்த குரலில் பேசுவதற்கு இதுதான் காரணம். இயக்குனர் கண்ணன்

மசாலா பிக்ஸ் சார்பில் கண்ணன் தயாரித்து, அவரது இயக்கத்தில் அதர்வா முரளி ஹீரோவாகவும் மெகா ஆகாஷ் கதாநாயகியாகவும் நடித்துள்ள திரைப்படம்தான் பூமராங். இந்த படத்தின் டப்பிங் பணிகள் தற்போது மும்மரமாக நடைபெற்று வருகிறது. இது பற்றி இயக்குனர் கண்ணன் கூறியதாவது : மேகா ஆகாஷை சொந்த குரலில் டப் செய்ய வலியுறுத்துவதற்கு முக்கிய காரணமே நடிகை மேகா ஆகாஷ் தான். பக்கத்து வீட்டு பெண் கதாபாத்திரத்தில் அவருடைய சிறப்பான நடிப்பு அப்படி. மிக சிறப்பாக நடித்திருக்கிறார், படத்தை பார்த்து நாங்கள் வியந்தோம். அவருடைய திறமைகள் அவளுக்கு டப்பிங் செய்யும் வேறு சில கலைஞர்களால் மறைந்து போவதை நாங்கள் விரும்பவில்லை. ஆரம்பத்தில், மேகா ஆகாஷ் தயக்கத்தோடு தான் இருந்தார். ஆனால் அவர் அதை செய்தபோது, ​​எங்களுக்கு நிறைவாக அமைந்தது. இந்த படத்தில் இந்துஜா முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். பாலிவுட் நடிகர் உபென் படேல் வில்லனாக நடித்திருக்கிறார். ஆர்.ஜே. பாலாஜி காமெடியில் கலக்க, காமெடி நடிகர் சதீஷ் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் 2017 ஆம் ஆண்டின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பான இந்துஜா பார்வையாளர்களைக் கவரக்கூடிய ஒரு சிறப்பான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். ஏராளமான திறமையாளர்களின் சங்கமமான இந்த பூமராங் நிச்சயம் பேசப்படும் படமாக அமையும் என இயக்குனர் ஆர் கண்ணன் கூறியுள்ளார்.

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news