பாரதிராஜாவின் மீண்டும் ஒரு மரியாதை… ட்ரைலர்

பாரதிராஜா கடைசியாக பொம்மலாட்டம் என்ற படத்தை இயக்கினார். அதன் பின் 11 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் நடிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள “மீண்டும் ஒரு மரியாதை” என்ற படம் பிப்ரவரி 21 ஆம் தேதி ரிலிஸாக உள்ளது. நட்சத்திரா, ஜோ மல்லூரி, மவுனிகா ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். 

வயதான முதியவர் ஒருவருக்கும் இளம்பெண் ஒருவருக்கும் இடையிலான கதையான இப்படத்தில் பாரதிராஜா, நட்சத்திரா. ஜோ மல்லூரி, மவுனிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு முதலில் ஓம் (ஓல்டுமேன்) எனப் பெயரிடப்பட்டிருந்தது. இப்போது முதல் மரியாதை படத்தை நினைவுப் படுத்தும் விதமாக மீண்டும் ஒரு மரியாதை என மாற்றப்பட்டுள்ளது. என்.ஆர் ரகுநந்தன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சபேஷ் முரளி பின்னணி இசை பணிகளை செய்துள்ளார்.  

இந்நிலையில் நேற்று இப்படத்தின் ட்ரைலரை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்த ட்ரைலர் ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இருந்தாலும் ஒரு சிலர் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news