பெரியாரையும், அம்பேத்கரையும் நாம் எதற்காக படிக்க வேண்டும் – அநீதி விழாவில் திருமுருகன் காந்தி பேச்சு

சென்னை: கடந்த 2017ம் ஆண்டு தமிழகத்தில் நடந்த நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த காரணத்தால் விரக்தி அடைந்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அனிதா என்ற பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். நாட்டையே உலுக்கிய இச்சம்பவம் டெல்லி வரை பரபரப்பாக பேசப்பட்டது. மத்திய அரசு மீதும், நீட் தேர்க்குழுவினர் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்நிலையில், மாணவி அனிதா மரணத்தை மயமாக வைத்து ‘அநீதி’ என்ற குறும்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீராம் காஞ்சனா தங்கராஜ் என்ற இளைஞர் இயக்கி இருக்கும் இந்த படத்தில், ராஜா ராணி’ பாண்டியன், பிரதீப் கே.விஜயன், லல்லு, கேப்ரிலா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே.சி.பால சாரங்கன் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு விஸ்வா, ஹரி பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இதன் திரையிடல் சென்னையில் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினர்களாக  இயக்குநர் பாலாஜி சக்திவேல், நடிகர்கள் ஜி.வி.பிரகாஷ், கதிர், மே17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி, இயக்குநர் இளன் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில், ஜீ.வி.பிரகாஷ் பேசுபோது, அநீதி குறும்படம் ரொம்ப முக்கியமான படம். இந்தப்படத்தைப் பாதிக்கு மேல் என்னால் பார்க்க முடியவில்லை. ஆனால் முடிவை பாசிட்டிவாக அமைத்தது சந்தோஷமாக இருந்தது. நீட் என்பதை யார் கொண்டு வந்தார்களோ அவர்களே அதை வைத்துக்கொள்ளட்டும் தமிழ்நாட்டுக்கு அது தேவையில்லை. நான் அனிதாவின் வீட்டுக்குச் சென்றிருக்கிறேன். அதனால் அந்த வலி எனக்கு அதிகமாக இருக்கிறது. அந்த கலக்கம் இன்னும் என்னை விட்டுப் போகவில்லை. இந்தப்படத்தின் கதையோட்டம் எப்படி இருந்தாலும் படத்தின் முடிவு மிக முக்கியமானது’ என்றார்.

தொடர்ந்து மே17 இயக்கத்தின் தலைவர் திருமுருகண் காந்தி பேசும்போது, அனிதாவின் மரணத்தின் போது நான் சிறையில் இருந்தேன். சிறையிலே ஒரு கொந்தளிப்பான மனநிலையில் இருந்தேன். சிறையில் பல்வேறு குற்றங்களுக்காகக் கைதாகி இருந்த கைதிகள் ஒன்றுகூடி அனிதா மரணத்துக்கு நீதி கேட்டு உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்தோம். சிறையில் இருந்தவர்களையே அந்த அளவுக்கு பாதிக்கச் செய்த சம்பவம் அது.

ஒரு தேசத்தில் அறம் இல்லாவிட்டால் அந்தத் தேசத்தின் மொழியில் உயிர் இருக்காது என்று ஒரு இலங்கைக் கவிஞர் சொன்னார். படைப்புலகம் இதுபோன்ற கொலைகளைப் பதிவு செய்யும் போதுதான் அது பரவலாகப் போய்ச்சேரும். எனக்கு ஒரு வருத்தம் உண்டு. 9 ஆண்டுகள் கடந்துவிட்டது ஈழத்தில் படுகொலைகள் நடந்து. இதுவரை அதைப்பற்றி ஒரு படைப்புகூட வரவில்லை என்ற வருத்தம் உண்டு. இந்தக் குறும்படத்தை கொங்கு மண்டலத்தில் எடுத்திருக்கிறார்கள். கொங்கு மண்டலத்தில் ஒரு அம்பேத்கர் சிலையை கூட பார்க்க முடியவில்லை. இந்திய அரசியல் அமைப்புச் சட்டமே மனுதர்மத்தை அடிப்படையாக கொண்டதாக இருக்கிறது. பெரியாரையும் அம்பேத்கரையும் கொஞ்சம் படித்தாலே நீங்கள் உணர்ந்து கொள்ளலாம். ஊரும் சேரியும் இருக்கும் வரை இந்தச்சமூகம் முன்னேறும் தகுதியற்றது” என்றார்.

இயக்குநர் ஸ்ரீராம் காஞ்சனா தங்கராஜ் பேசும்போது, ‘நீட் தேர்வு பற்றி திருமுருகன் காந்தி பேசும் வீடியோக்களை பார்த்துதான், இந்தப் படம் இயக்கும் எண்ணம் ஏற்பட்டது. இந்தப் படம் பற்றி திருமுருகன் காந்தியிடம் பேசச் சென்றபோதுதான், அவர் கைதானார். அவர் எனக்கு மிகப்பெரிய இன்ஷ்பிரேஷன். எனக்கு உறுதுணையாக இருக்கும் நான்கு பேருக்கு மிகவும் நன்றி’ என்றார்.

இப்படம், 5வது நொய்டா இண்டர்நேஷனல் பிலிம் விருது, கொல்கத்தா இண்டர்நேஷனல் கல்ட் பிலிம் விருது, 8வது தாதா சாயிப் பால்கே ஜூரி விருது, 7வது பெங்களூரு பிலிம் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news