மாஸ்டர் விஜய் சேதுபதியின்…. ‘பொளக்கட்டும் பற பற’ புதிய லிரிகள் வீடியோ ரிலீஸ் இதோ …

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் “மாஸ்டர்’ படத்தில் நடித்து வருகிறார். கல்லூரி பேராசிரியராக விஜய் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். மாணவராக சாந்தனு பாக்யராஜும் , வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர்.

மேலும் ஆன்ட்ரியா, 96 புகழ் கௌரி கிஷன் உள்ளிட்ட சிலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இப்படத்தின் முதல் மூன்று போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அனிருத் இசையமைத்திருக்கும் இப்பாடல்கள் அமரோக வரவேற்பை பெற்றுள்ளது. ஆடியோ லான்சிற்கு பிறகு படத்தின் ட்ரைலர் மற்றும் டீஸருக்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் சற்றுமுன் இப்படத்தில் இடம்பெறுள்ள பொளக்கட்டும் பற பற’ என்ற லிரிகள் வீடியோ பாடலை படக்குழு யூடியூபில் வெளியிட்டுள்ளனர். அனிருத் இசையில் சந்தோஷ் நாராயணன் பாடியுள்ள இந்த பாடல் வில்லன் விஜய் சேதுபதிக்காக அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news