உலக அளவில் முதலிடம் பிடித்து பிரம்மாண்ட சாதனை செய்த சர்க்கார் பட டீஸர் – விவரம் உள்ளே

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் ‘சர்கார்’ படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர் தயாரிக்கிறது. இசை ஏ.ஆர்.ரஹமான். துப்பாக்கி மற்றும் கத்தி படங்களை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் கூட்டணியில் உருவாகி வரும் சர்கார் படத்தின் முதல் அறிவிப்பு வந்த நாளில் இருந்தே ரசிகர்களிடம் எதிபார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இன்னிலையில், இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியாகியுள்ள டீசர் படு மிரட்டலாக இருக்கிறது. டீசரின் மியூசிக் அதிர வைக்கிறது. இந்த டீசரை பார்க்கும் போது, படத்தின் கதை புரிய வருகிறது. அமெரிக்காவில் ஒரு பெரிய கார்ப்பரேட் கம்பெனியில் வேலை பார்க்கும் விஜய், தேர்தலில் ஓட்டு போடுவதற்காக தமிழகம் வருகிறார்.

ஆனால் அவருடைய ஓட்டை வேறு யாரோ ஏற்கனவே போட்டுவிடுகிறார்கள். இதனால் அரசியல்வாதிகளுடன் மோதல் ஏற்படுகிறது. மக்களுக்கு தங்களுடைய ஓட்டின் மதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார் விஜய் என கூறப்படுகிறது. அவன் ஒரு கார்ப்பொரேட் மான்ஸ்ட்டர், உங்க ஊரு தலைவன தேடிப்பிடிங்க, இது தான் நம்ம சர்க்கார் போன்ற அனல் பறக்கும் வசனங்கள் டீசரில் இடம்பெற்றுள்ளன.

டீசரை பார்க்கும் போது படம் குறித்த எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகமாகிறது. இந்த படத்தின் வெளியான 10 நிமிடத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. மேலும் 5 மணி நேரத்தில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

மேலும் உலக அளவில் அதிவேகமாக [36 மணிநேரம்] ஒரு மில்லியன் லைக்ஸ்களை பெற்று முதலிடத்தில் இருந்த அவெஞ்சர் பட டீசரை, வெறும் 5 மணிநேரத்தில் சர்க்கார் டீஸர் முறியடித்துள்ளது.

உலக திரை வரலாற்றில் ஒரு படத்தின் டீஸர், குறைந்த நேரத்தில் ஒரு கோடி பார்வையாளர்களையும், ஒரு மில்லியன் லைக்ஸையும் பெறுவது சர்க்கார் படம் ஆகும். தற்போது வரை சர்க்கார் டீஸர் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்த்க்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news