மண்ணு உருண்டை மேல… சூரரை போற்று வீடியோ பாடல்!

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘சூரரை போற்று’. விமானி ஒருவரின் உண்மை கதையை தழுவி எடுக்கப்படும் இந்த படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் ஆடியோ வெளியீடு தமிழ் சினிமாவிலேயே முதல்முறையாக நடுவானில் விமானத்தில் நடத்தப்பட்டது.

பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள சூரரை போற்று மே 1ம் தேதி வெளியாகும் என கோரப்படுகிறது. சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிக்கும் இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். இவர்களுடன் கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்ககளில் நடித்துள்ளனர்.

நெடுமாறன் ராஜாங்கம் என்ற கதாபாத்திரத்தில் சூர்யா பைலட் ஆபீஸராக நடித்துள்ள இப்படத்தில் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். அண்மையில் வெய்யோன் சிலை என்ற பாடல் வெளியானதை அடுத்து சற்றுமுன் இப்படத்தில் இடம்பெறும் “மண்ணு உருண்டை மேல” என்ற வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளனர். நாட்டுப்புற பாடகர் செந்தில் கணேஷ் பாடியுள்ள இப்பாடல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news