பொன்னியின் செல்வனில் இணைந்த இன்னொரு ஹீரோயின்…

கல்கியின் புகழ்பெற்ற நாவலான ‘பொன்னியின் செல்வனை’ சினிமாவாக்கி வருகிறார் இயக்குனர் மணிரத்னம். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாள மொழிகளில் படம் உருவாகிறது.

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் நந்தினியாக, ஐஸ்வர்யா ராயும், பூங்குழலியாக ஐஸ்வர்யா லட்சுமியும், சுந்தரச் சோழனாக சரத்குமாரும் ஆழ்வார்க்கடியான் நம்பியாக ஜெயராமும் சின்ன பழுவேட்டைரையராக ரகுமானும் ஆதித்த கரிகாலனாக விக்ரமும் வந்தியத் தேவனாக கார்த்தியும் குந்தவையாக, த்ரிஷாவும் அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும் நடிப்பதாகக் கூறப்படுகிறது

இதன் ஷூட்டிங் தாய்லாந்தில் பிரமாண்ட செட் அமைத்து நடந்து வந்தது. அங்கு நடந்த படப்பிடிப்பில் கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி உட்பட பல நடிகர், நடிகைகள் கலந்துகொண்டனர். இந்நிலையில், படக்குழு ஷூட்டிங்கை முடித்துவிட்டு பொங்கலுக்கு முன் சென்னைத் திரும்பியது. அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடந்தது. இப்போது ஐதராபாத்தில் நடந்து வருகிறது.

இந்தப் படத்தில் நடிகர் ரியாஸ் கான் சமீபத்தில் இணைந்தார். இப்போது இன்னொரு நடிகையும் இணைந்துள்ளார். அவர் ஷோபிதா துலிபாலா.I

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news