September 22, 2018
Inandoutcinema - Tamil cinema news

மோகன்லாலுக்கு பெருகி வரும் எதிர்ப்பு. நடிகர் சங்கத்தில் இருந்து வெளியேறிய நடிகர் திலீப். விவரம் உள்ளே

கேரள மாநில மலையாள நடிகர்கள் சங்க தலைவராக இருந்த இன்னசென்ட் உடல் நலக்குறைவு காரணமாக பதவியிலிருந்து விலகினார். இதையடுத்து மலையாள நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், சங்க தலைவராக நடிகர் மோகன்லால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். நடிகை ஒருவர் கடத்தல் வழக்கில் சிக்கி சிறை சென்றதால், நடிகர் சங்கத்தில் இருந்து திலீப் நீக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், மீண்டும் திலீப் சங்க உறுப்பினராக சேர்க்கப்பட்டு உள்ளார். திலீப் மீண்டும் நடிகர் சங்கத்தில் சேர்க்கப்பட்டது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் சங்கம் உணர்சியற்றதாக இருப்பதாக கூறினார். இதை தொடர்ந்து சில நடிகைகள் சங்கத்தில் இருந்து வெளியேறினர். இந்த விவகாரத்தில் நடிகர் சங்க தலைவர் மோகன்லாலுக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வந்துகொண்டே இருந்தன.

இதை தொடர்ந்து தான் நிரபராதி என நிரூபிக்கும் வரை சங்கத்தில் உறுப்பினராக மாட்டேன் என நடிகர் திலீப் கூறி உள்ளார். நான் குற்றமற்றவன் என நிரூபிக்கப்படும் வரை எந்தச் சங்கசெயலிலும் ஈடுபட நான் விரும்ப வில்லை என் கூறியுள்ளார். முன்னதாக நடிகர் சங்கம் தன்னை சேர்த்து கொள்ளும் முடிவு எடுத்ததற்கு திலீப் தந்து பேஸ்புக்கில் சங்கத்திற்கு நன்றி தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news