இணையத்தில் வைரலாக பரவும் விஜய் சேதுபதியின் புகைப்படம் – விவரம் உள்ளே

தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சுரேந்திர ரெட்டி இயக்கத்தில் உருவாகி வரும் சரித்திர படம்தான் சயிரா நரசிம்ம ரெட்டி ஆகும். நடிகர் மற்றும் தயாரிப்பாளரான ராம்சரணின் கோனிடேலா ப்ரொடக்சன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம் மிகுந்த பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.

இந்த படத்திற்காக பாலிவுட், டோலிவுட் மற்றும் கோலிவுட் என இந்திய சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்கள் பட்டாளத்தையே திரட்டியுள்ளனர். இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒபாயா என்ற கதாபாத்திரத்திலும், நடிகர் கிச்சா சுதீப் அவுக்கு ராஜா என்ற கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர்.

இந்த படம் நடிகர் விஜய் சேதுபதி தெலுங்கு சினிமாவிற்கு அறிமுகமாகவுள்ள முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் சிரஞ்சீவி, நயன்தாரா, அமிதாப் பச்சன், ஜெகபதி பாபு, தமன்னா, நாசர், பிரகாஷ் ராஜ், பூனம் கார் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இன்னிலையில் ஜியார்ஜியாவில் நடைபெற்று வரும் இந்த படப்பிடிப்பில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் கிச்சா சுதீப் ஆகியோர் இணைந்துள்ளனர்.

இருவரும் இணைந்து படப்பிடிப்பில் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் தற்போது வெளியாகியுள்ளது. வெளியானது முதல் இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news