Inandoutcinema - Tamil cinema news

நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி கண்டிப்பாக போட்டியிடும் – கமல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வரும் கமல்ஹாசன் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தாலும் பெரும்பாலானோர் எதிர்மறையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இவர் நடிப்பில் உருவாகும் விஸ்வரூபம் 2 படத்தின் வெளியிட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சில பிரச்சினைகளில் சிக்கி 3 வருடங்களுக்கு மேல் முடங்கி இருந்த கமல்ஹாசனின் விஸ்வரூபம்–2 படம் வருகிற 10–ந் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தை உலகம் முழுவதும் 5 ஆயிரம் திரையரங்கில் வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இன்னிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசனிடம் சிலைக் கடத்தல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதில் அளித்த அவர், தமிழக அரசு தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவே சிலைக் கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ-க்கு மாற்றி இருக்கிறது. சி.பி.ஐ வழக்கு மாற்றப்பட்டதில் உள்நோக்கம் இருக்கிறது. தமிழக அரசுக்கு வெளிப்படைத் தன்மை இல்லை. அதனாலே லோக் ஆயுக்தாவை நீர்த்துப் போகச் செய்துள்ளனர்.

இதை மக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர் என கூறினார். பின்னர் நாடாளுமன்றத் தேர்தல் குறித்த கேள்விக்குப் பதிலளித்தார். அதில், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி நிச்சயம் போட்டியிடும். ஆனால், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் பேசி முடிவெடுக்கப்படும். மேலும் விஸ்வரூபம் 2 திரைப்படம் திட்டமிட்டபடி வெளியிடப்படும் என நடிகர் கமல் ஹாசன் கூறியுள்ளார்.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news