Inandoutcinema - Tamil cinema news

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தயார் – கமல்ஹாசன் அறிவிப்பு

சென்னை: அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேட்தலில் போட்டியிட மக்கள் நீதி மையம் கட்சி தயாராக உள்ளதாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

“மக்கள் நீதி மய்யம்” கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில்; மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகளுக்குக் கோவையில் பயிலரங்கம் நடைபெற்று வருகிறது. மற்ற கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடத்தும்  அதை மாற்றி நாங்கள் பயிலரங்கம் நடத்தி வருகிறோம்.

வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தயாராகி வருகிறது. அரசியல்வாதிகளிடம் மக்கள் கேள்வி கேட்பது அவர்கள் ஜனநாயக உரிமை. அதற்காக தாக்குவது அரசியல் மாண்பு அல்ல.

அப்படிப் பார்த்தால் அரசியலில் விமர்சனமே இருக்கக் கூடாது என்ற நிலை மாறி வருவதுபோல் உள்ளது. காந்தி, பெரியார், அண்ணா போன்றவர்கள் இதுபோன்ற விமர்சனங்களை  ஏற்றுக்கொண்டு அதற்கான பதில்களை அறிவுபூர்வமாகச் சொல்லி கடந்து சென்று நமக்கு வழிகாட்டியுள்ளனர். இவ்வாறு கூறினார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news