பிரபல நடிகரின் மெழுகு சிலை !? ஆச்சிரியத்தில் திரையுலகம் !? சந்தேகத்தில் ரசிகர்கள்!?

பிரபல நடிகர் மகேஷ் பாபுக்கு முதல் முறையாக ஏஎம்பி சினிமா சார்பில் மெழுகு சிலைதிறக்கபட்டது.

பிரபல தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு தனக்கென்று வடிவமைக்கப்பட்ட மெழுகு சிலையை ஹைதராபாத்தில் உள்ள எம்பி சினிமாஸ் அரங்கத்தில் இன்று திறந்து வைத்துள்ளார்.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் மகேஷ் பாபு. இவர், சமீபத்தில் தமிழில் ஸ்பைடர் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். தற்போது மஹரிஷி என்ற படத்திலும், எஸ்.எஸ்.எம்.பி 26 என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில், ஹைதராபாத்தில் உள்ள ஏஎம்பி சினிமாஸ் அரங்கத்தில் வைக்கப்பட்ட தன்னை போன்ற மெழுகு சிலையை இன்று திறந்து வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் மகேஷ் பாபு மனைவி மற்றும் குழத்தைகளுடன் கலந்து கொண்டுள்ளனர்.

சிங்கப்பூரில் உள்ள மேடம் துஷாத் என்ற அருங்காட்சியகத்தில் தான் முதலில் மகேஷ் பாபுவின் மெழுகு சிலை நிறுவப்பட்டது. பின் அங்கிருந்து, ஹைதராபாத்திற்கு வரப்பட்டு உள்ள ஏஎம்பி சினிமாஸில் வைக்கப்பட்டுள்ளது. மகேஷ் பாபுவின் இந்த மெழுகு சிலைதான் சிங்கப்பூரிலிருந்து இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்ட முதல் சிலை.

இதற்கு முன்னதாக, பாகுபலி ஹீரோ பிரபாஸ்க்கு சிங்கப்பூரில் உள்ள மேடம் துஷாத் அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை நிறுவப்பட்டது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news