Inandoutcinema - Tamil cinema news

பாடகி சித்ராவை திக்குமுக்காட வைத்த இசைஞானி!!

சென்னை: இசைஞானி இளையராஜா நடிகர் கமல்ஹாசன் தயாரித்து, நடித்து வரும் “சபாஷ் நாயுடு”, விஜய்சேதுபத்தி தயாரிப்பில் உருவாகி வரும் “மேற்குதொடர்ச்சி மலை” உள்ளிட்ட படங்களுக்கு இசை அமைத்து வருகிறார்.

இதில், இளையராஜா இசை அமைக்கும் ஒரு பாடலுக்கு பாடகி சித்ராவை பாட வைக்க அவரை அழைத்திருந்தார். இந்நிலையில், ஸ்டுடியோவுக்கு வந்த சித்ராவுக்கு பெரும் ஆச்சரியம் காத்திருந்தது.  சித்ரா தனது 55வது பிறந்தநாளை கடந்த 27ம் தேதி கொண்டாடினார். அவரது பிறந்தநாள் பற்றி தெரிந்த இளையராஜா ஸ்டுடியோவுக்கு வந்த அவருக்கு பிறந்தநாள் கேக் ஏற்பாடு செய்து அதை வெட்ட வைத்து கொண்டாடினார்.

இந்த புகைப்படங்களை பாடகி சித்ரா தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், அவர் “என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் இது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மலையாள சினிமாவில் 1970ல் பாடத்தொடங்கிய சித்ரா தமிழில் 1986ல் வெளியான சிந்துபைரவி படத்தில் “பாடிரியேன் படிப்பரியேன்” பாடல் மூலம் புகழ் பெற்றார். அந்த படலுக்கு அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. சினிமாவில் பாட ஆரம்பித்து 33 வருடங்களை கடந்துள்ள சித்ரா இதுவரை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ளார்.

கடைசியாக 2015ல் மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹமான் இசையில் “ஓகே கண்மணி” படத்தில் அவர் பாடிய “மலர்கள் கேட்டேன்” பாடல் அனைவரையும் கட்டுபோட்டது குறிப்பிடத்தக்கது.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news