Inandoutcinema - Tamil cinema news

மாரி 2 படவெளியீடு தேதி அறிவிப்பு… விவரம் உள்ளே

Maari 2..

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், காஜல் அகர்வால் நடிப்பில் அனிருத் இசையில் கடந்த 2015ம் ஆண்டு வெளிவந்த படம் மாரி. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து மாரி படத்தின் இரண்டாம் பாகம் மாரி-2 வாக உருவாகி வருகிறது.

இதில், காஜல் அகர்வாலுக்கு பதில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் கழுகு கிருஷ்ணா, வரலட்சுமி, மலையாள நடிகர் டோவினோ தாமஸ், வித்யா ப்ரதீப், ரோபோ சங்கர், அறந்தாங்கி நிஷா ஆகியோர் நடிக்கின்றனர்.

மாரி-2 படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சென்னை உள்ளிட்ட பல இடங்களில் நடந்து வந்த மாரி-2 படத்தின் படப்பிடிப்பு இனிதே முடிவடைந்துள்ளது. இது குறித்த அறிவிப்பை இயக்குனர் பாலாஜி மோகன் தனது டிவிட்டர் பக்கதில் வெளியிட்டுள்ளார்.

தற்போது போஸ் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்கப்படவுள்ளது. இப்படம் இந்த வருடம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் அவரது பதிவு மாரி 3 வருவதற்கான அறிகுறியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news