மாநாடு படத்தின் பாடலா இது !? குழப்பத்தில் ரசிகர்கள் !

சிம்பு நடிக்க இருக்கும் மாநாடு படத்தின் முதல் சிங்கிள் டிராக் லீக்காகியுள்ளதாக சமூக வலைதளங்களில் சிம்பு பாடிய பாடல் ஓன்று வெளியாகி வருகிறது.

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வந்த வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தைத் தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இப்படத்திற்கு மாநாடு என்று டைட்டில் வைக்கப்பட்டது. அதோடு, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது. இந்த நிலையில், படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியானது. இதற்கு மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. படம் திட்டமிட்டப்படி எடுக்கப்படும் என்று விளக்கம் கொடுத்திருந்தார்.

இந்த நிலையில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள உனக்கு “நான் வேண்டான் ட” என்ற முதல் சிங்கிள் டிராக் லீக்காகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்பாடலை சிம்பு தான் பாடியிருக்கிறார். ஆனால், உண்மையில், அது இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடலா என்பது மாநாடு படக்குழு முறையான எந்த அறிவிப்பும் தரவில்லை.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news