சிம்டங்காரேன் என்பதற்கு இதுதான் பொருளா ? சந்தேகத்தை விளக்கிய பாடலாசிரியர் ?

நடிகர் விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் சிங்கிள் ட்ராக் சிம்டாங்காரன் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக சமூக வலைதளத்தில் விவாதங்கள் நடைபெற்று வருகிறது. மிகவும் எதிர்பார்த்த விஜய் மற்றும் ரஹ்மான் ரசிகர்களுக்கு சிம்டாங்காரன் பாடல் சற்று ஏமாற்றத்தை தருவதாக சமூகவலைதளங்களில் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பாடலசிரியர் விவேக் எழுதியுள்ள இந்த பாடல் வரிகள்தான் புரியவில்லை என்றால், ஏ.ஆர்.ரகுமானின் ட்யூனும் சுமாராக இருப்பதாக பாடல் கேட்ட அனைவரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனிடையே பாடலாசிரியர் ‘சிம்டாங்காரன்’ என்றால் கவர்ந்து இழுப்பவன் / பயமற்றவன் / துடுக்கானவன் என்று தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். வெகு நாட்களாக சர்கார் படத்தை பற்றிய அப்டேட்களுக்காக காத்திருந்த விஜய் மற்றும் ரகுமானின் ரசிகர்கள் தற்போது சிம்டாங்காரன் சொல்லை வைத்து கெத்துகாட்டி வருகின்றனர்.

மேலும் படத்தின் சிறப்பான பாடலையே முதல் சிங்கிள் ட்ராகாக வெளியிடுவது வழக்கம் என்பதால், இதனை வைத்து படத்தின் மற்ற பாடல்கள் எப்படி இருக்கும் என விஜய் ரசிகர்கள் சற்று பயத்தில் உள்ளது போல் தோன்றுகிறது. அவர்களது பதிவுகள். பொதுவாக ரகுமானின் மெட்டுக்கள் மெல்ல மெல்ல மனத்தில் இடம்பிடிக்கும் என்பதால் சிம்டாங்காரன் பலமுறை கேட்டு வருவதாக மீம் போட்டு கலாய்த்து வருகின்றனர். இதனிடையே சர்கார் படத்தில் அடுத்த சிங்கிள் வரும் ஞாயிற்றுகிழமை வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news