கார்த்தி நடிக்கும் புதிய படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு – காணொளி உள்ளே

கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்து வரும் படம் தேவ் ஆகும். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். ரகுல்ப்ரீத் சிங், தீரன் திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் கார்த்தியுடன் இணைகிறார். அறிமுக இயக்குனர் ரஜத் ரவிஷங்கர் இயக்கும் இப்படத்துக்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். லஷ்மண் தயாரிக்கும் இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் இமாச்சலப் பிரதேசத்தின் குலு மணாலியில் நடைபெற்றது. கடும் குளிர், மழை, வெயில் என பாராமல் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு ஏறத்தாழ முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. அதை உறுதிப்படுத்தும் வகையில் நடிகர் கார்த்தி தனது அடுத்த படத்தின் வேளைகளில் மும்மரமாக இறங்கியுள்ளார். கார்த்தி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று ஆரம்பரமானது.

பெயரிடப்படாத இப்படத்திற்கு தற்காலிகமாக கார்த்தி 18 என்றுபெயரிடப்பட்டுள்ளனர். தற்போது கார்த்தியின் நடிப்பில்உருவாகியுள்ள தேவ் படம் ரிலீஸுக்கு தயாராகி உள்ளது. தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம் எனஅடுத்தடுத்து மாபெரும் வெற்றிப்படங்களைக் கொடுத்து வரும் நாயகன் கார்த்தியுடன் இணைந்து கைகோர்க்க வருகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்கம் என மாநகரம் படம் மூலம் அனைவராலும் பாராட்டுப்பெற்ற இவர் இயக்கும் இரண்டாவது படம் இது. இப்படத்தில் நரேன், ரமணா, ஜார்ஜ் மரியான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களாக நடிக்க, மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. முழுக்க முழுக்க ஆக்ஷன் த்ரில்லர் படமாக இப்படம்பிரம்மாண்டமாக உருவாகிறது.

படத்தில் 70 சதவிகிதம் ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் இருக்கும். இதற்காக ஸ்டன்ட் மாஸ்டர் அன்பறிவ் பிரத்யேக காட்சிகளை அமைக்கிறார்கள். சென்னை மற்றும் திருநெல்வேலியில் இப்படம் உருவாகிறது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் மற்றும் விவேகானந்தா பிக்சர்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து இந்த ‘கார்த்தி 18 படத்தை தயாரிக்கிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news