LKG Movie – விமர்சனம்

LKG – வார்டு கவுன்சிலராக இருக்கும் ஆர்.ஜே.பாலாஜி தமிழக முதல்வரான கதை. அதற்கு அவர் எப்படி கஷ்டப்படுகிறார், என்ன மாதிரியான தில்லுமுல்லு செய்கிறார் என்பதை நகைச்சுவை உணர்வோடு கூறியிருக்கும் படம் LKG.

அரசியல் படம் என்றால் ஒரு தவறான அரசியல்வாதி, அவரை எதிர்க்கும் நேர்மையான கதாநாயகன் என்பது எப்பொழுதும் நாம் பார்த்து கொண்டிருக்கும் சினிமா. ஆனால் இதில் ஒரு தவறான அரசியல்வாதி, தவறான அரசியல்வாதிகளை அடித்து எப்படி மேலே வருகிறார் என்பதை கூறியிருக்கின்றனர்.

அரசியல் படங்கள் என்றால் அது மக்களுக்கு சில பாடங்களை சொல்லுமாறு இருக்கும். அல்லது அரசியல்வாதிகளுக்கு அறிவுரை சொல்வது போல் இருக்கும். இந்த படம் அரசியல்வாதிகளை நம்பும் மக்களுக்கு என்ன நடக்கும் என்பதை கூறுகிறது.

ஆனால் அரசியல் இப்படித்தான் இருக்கிறது என்பதை சொல்லிவிட்டு கடைசியாக மக்கள் திருந்த வேண்டும் என்று கூறுவது கைத்தட்டல் வாங்குவதற்காக மட்டுமே இருக்கிறதே தவிர, மாற்றத்திற்கான விஷயமாக இல்லை.

கதாநாயகனாக ஆர்.ஜே.பாலாஜி கற்று கொள்ள நிறைய இருக்கிறது. அடுத்து நாயகனாக நடிக்க போகும் படங்களில் அதற்கான கவனத்தை செலுத்த வேண்டும் என்பது நமது கோரிக்கை.

கதாநாயகி பிரியா ஆனந்த் தனக்கனா ரோலில் நன்றாக பொருந்தி இருக்கிறார். அந்த ரோமாஸ் காட்சிகளை தள்ளி வைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

நடிகராக ஒரு அரசியல்வாதி நாஞ்சில் சம்பத். உண்மையான கதாபாத்திரம் என்பதால் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். இன்னொரு அரசியல்வாதியாக வரும் J K ரித்தீஷ் அவருக்கும் நடிப்பில் கொஞ்சம் கவனம் தேவை.

கதை திரைக்கதை வசனம் எழுதி இருப்பவர் ஆர்.ஜே பாலாஜி. அவருக்கு அந்த கதாபாத்திரம் நன்றாக இருக்கிறது. நடிப்பை விட்டுவிட்டு இதில் அவர் கவனம் செலுத்தலாம். இயக்குநராக பிரபுவிற்கு பெரிதாக வேலை இல்லை.

ஒளிப்பதிவு ஆங்காங்கே கண்ணை வலிக்க வைக்கிறது. இசை படத்திற்கு ஒரு பலம். காமெடிகள் அனைத்தும் கொஞ்சம் நம்மை கஷ்டப்பட்டுதான் சிரிக்க வைக்கிறது. திரைக்கதையாக கேட்கும் பொழுது நன்றாக இருந்த LKG பார்க்கும் பொழுது நம்மை முகம் சுழிக்க வைக்கிறது.

LKG : 2.5/5

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news