பாலியல் சர்ச்சையில் சிக்கிய விக்ரம், அமலா பால் பட இயக்குனர் – விவரம் உள்ளே

இயக்குநர் மணிரத்னத்திடம் உதவியாளராகப் பணியாற்றிய சுசி கணேசன் பைவ் ஸ்டார் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். திரைத்துறைக்கு வரும் முன் இதழாலளராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பைவ் ஸ்டார் படத்திற்கு பிறகு திருட்டு பயலே, கந்தசாமி போன்ற படங்களின் வணிக ரீதியான வெற்றி பெற்றதன் மூலம் தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனராக உருவெடுத்தார்.

இவரது இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான திருட்டு பயலே 2 படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இன்னிலையில் இவர் மீது இயக்குனர் லீனா மணிமேகலை பாலியல் புகாரை தெரிவித்துள்ளார். லீனா மணிமேகலை முகநூல் பக்கத்தில் பாலியல் தொல்லையை இப்போது மீ டூ ஹேஷ்டேக்கில் பதிவிட்டு டைரக்டர் சுசிகணேசன் பெயரையும் குறிப்பிட்டு உள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது : நான் 2005-ல் டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், தயாரிப்பாளராகவும் வேலை செய்தபோது பிரபலமான ஒரு இளம் இயக்குனரை [சுசி கணேசன்] நேர்காணல் செய்தேன். நிகழ்ச்சியை முடித்து ஆட்டோ பிடிப்பதற்காக ஸ்டுடியோவில் இருந்து தெருமுனைக்கு நடந்து சென்றேன். அப்போது நான் நேர்காணல் செய்த இயக்குனர் கார் எனது அருகில் வந்து நின்றது.

வடபழனியில்தானே வீடு. நான் இறக்கி விடுகிறேன் என்று கூறிய டைரக்டரை நம்பி அவரது காரில் ஏறினேன். சில நிமிடங்கள் உரையாடல் நன்றாக சென்றது. அதன்பிறகு திடீரென்று அவரது குரல் மாறியது. என்னிடம் இருந்த மொபைல் போனை பிடுங்கி ‘ஆப்’ செய்து காருக்குள் எங்கோ எறிந்தார். தனது அடுக்குமாடி குடியிருப்புக்கு வரவேண்டும் என்று மிரட்டினார். நான் அதிர்ச்சியானேன்.

சிறிது நேரம் செயல் இழந்து போனேன். அதன்பிறகு சுதாரித்துக் கொண்டு என்னை இறக்கி விடுமாறு கேட்டேன். கெஞ்சினேன். காரை உடைத்து விடுவேன் என்றேன். அலறினேன். 20 நிமிடத்தில் விடவேண்டிய இடத்துக்கு 45 நிமிடங்களாக கார் சுற்றிக்கொண்டு இருந்தது.

என் பையில் ஒரு சிறிய கத்தி வைத்திருந்தேன். அதை எடுத்து மிரட்டினேன். அதன்பிறகு என்னை இறக்கி விட்டார். அன்று நடந்ததை எனக்கு நெருக்கமானவர்களிடம் கூட என்னால் சொல்ல தைரியம் இல்லை. அதை நினைத்தால் இப்போதும் எனக்கு நடுக்கமாக உள்ளது என லீனா மணிமேகலை கூறியுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news