கடன் பாக்கியை செலுத்தாத லதா ரஜினிகாந்துக்கு உயர்நிதி மன்றம் எச்சரிக்கை- விவரம் உள்ளே

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மனைவி லதா ரஜினிகாந்த் கோச்சடையான் படத்திற்காக தனது மீடியா ஒன் நிறுவனம் ஆட் பியூரோ என்ற நிறுவனத்திடம் ரூ.10 கோடி கடன் வாங்கி கடன் தொகையை திரும்ப செலுத்தவில்லை  என்று நீதிமன்றத்தில் வழக்கை தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடன் பாக்கியை செலுத்த லதா ரஜினிகாந்துக்கு உச்சநீதிமன்றம் 12 வாரம் காலக்கெடு கொடுத்திருந்தது. இந்த காலக்கெடு முடிவடைந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

இவ்வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், பானுமதி ஆகியோர் விசாரித்தனர். ஆட் பியூரோ நிறுவனத்தின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் பாலாஜி தங்களது தரப்பு வாதத்தை நீதிபதிகளிடம் முன்வைத்தனர். அப்போது கேள்வி எழுப்பிய நீதிபதிகள் நீதிமன்றம் உத்தரவிட்டும் கடன் பாக்கியான 80 லட்சம் ரூபாயை தனியார் நிறுவனத்திற்கு வழங்காதது ஏன்? என லதா ரஜினிகாந்த் தரப்பினரிடம் கேட்டனர்.

மேலும் ஜூலை 10ம் தேதிக்குள் லதா ரஜினிகாந்த் தனது தரப்பு விளக்கத்தை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று கூறி வழக்கை ஜூலை 10ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இதை மீறினால் பெங்களூருவில் ஆட் பியூரோ நிறுவனம் தொடுத்திருக்கும் வழக்கில் லதா ரஜினிகாந்த் விசாரணையை சந்திக்க நேரிடும் என்றும் உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news