விஸ்வாசம் டீஸர் தேதி அறிவிப்பு – ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் தல அஜித்

வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் நடிப்பில், 4வது முறையாக சிவா இயக்கியுள்ள படம் விஸ்வாசம். சத்யஜோதி நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில் விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

முதல் முறையாக அஜித் படத்திற்கு இமான் இசையமைத்திருக்கிறார். ரஜினி நடித்த பேட்ட படத்துடன் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. புத்தாண்டு அன்று படத்தின் டீஸர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கண்ணான கண்ணே பாடலின் லிரிக்கல் வீடியோ நேற்று மாலை வெளியாகியுள்ளது. அப்பா, மகள் இடையேயான பாசத்தை எடுத்துக்காட்டும் கண்ணான கண்ணே பாடல் ஹிட் பாடல்களின் வரிசையில் சேர்ந்துள்ளது.

என்னை அறிந்தால் படத்தில் வந்த உனக்கென்ன வேணும் சொல்லு என்ற பாடல் போன்று இதுவும் அனைத்து அப்பாக்கள், மகள்களை கவர்ந்துள்ளது. கண்ணான கண்ணே பாடல் வீடியோவை யூடியூப்பில் இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். தல ரசிகர்கள் தங்கள் வீட்டு குழந்தைகளின் புகைப்படங்கள, வீடியோக்களை சமூக வளைத்தளத்தில் கண்ணான கண்ணே பாடலுடன் வெளியிட்டு வருகிறார்கள்.

தற்போது வரை இந்த பாடல் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் இருக்கிறது. விஸ்வாசம் டீஸர் ஜனவரி 1ம் தேதி வெளியாகும் என்ற தகவல் பற்றி உறுதிப்படுத்தப்பட்ட தகவல் ஏதும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இது பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news