வசூலில் சாதனை படைத்தது விஸ்வாசமா பேட்டையா ?

வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் நடிப்பில், 4வது முறையாக சிவா இயக்கியுள்ள படம் விஸ்வாசம். சத்யஜோதி நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில் விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முதல் முறையாக அஜித் படத்திற்கு இமான் இசையமைத்திருக்கிறார். ரஜினி நடித்த பேட்ட படத்துடன் இன்று வெளியாகியுள்ளது.

இதுவரை படம் பார்த்தவர்கள், எல்லா தரப்பினருக்கும் பிடித்த காமெடி செண்டிமெண்ட் ஆக்சன் என பல அம்சங்கள்கொண்ட படம் இது என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பொதுமக்கள் மத்தியில் படம் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. விஸ்வாசம் படத்துடன் இணைந்து வெளியான பேட்ட படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், பிரபல ஆங்கில சேனலான டைம்ஸ் நெள தனது ட்விட்டர் பக்கத்தில், விஸ்வாசம் படம் குறித்து பதிவிட்டுள்ளது. அந்த பதிவில் கூறப்பட்டதாவது : அஜித்குமார் நடித்துள்ள விஸ்வாசம், இன்று தமிழகத்தில் ஒரு புயலைப் போல தாக்கத்தை ஏற்படுத்தி ஓடிக்கொண்டிருக்கிறது. மிகப்பெரிய ஹிட்டான படமாக அமைந்திருக்கிறது என அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதனை அஜித் ரசிகர்கள் இணையத்தில் வைரலாக பரப்பி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவதால் அதிக வசூல் ஈட்டிய படம் எது என்பது ஓரிரு நாளில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news