நெறியாளராக (VJ) மாறிய விஜய் மகன் சஞ்சய் – தெறிக்கவிட்ட ரசிகர்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் அவரது மகனை வேட்டைக்காரன் படத்தில் அறிமுகப்படுத்தினார். அந்தப் படத்தில் நான் அடிச்சா தாங்க மாட்ட என்ற பாடலுக்கு விஜய்யுடன் சேர்ந்து நடனமாடிய சஞ்சய் அதன் பிறகு படங்களில் நடிக்கவில்லை. கடந்த ஆண்டு தனது பள்ளிப்படிப்பை முடித்த சஞ்சய் தனது அப்பாவைப் போலவே சினிமா துறையை தேர்வு செய்து ஃபிலிம் மேக்கிங் தொடர்பாக படித்து வருகிறார்.

சமீபத்தில் ஜங்ஷன் என்ற குறும் படத்தை ஜேசன் சஞ்சய் இயக்கி நடித்திருந்தார். அதில் தன்னை ராகிங் செய்தவர்களை பழிவாங்கும் கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார். சில நிமிடங்களே ஓடக்கூடிய அந்த குறும்படத்தில் ஜேசன் சஞ்சயின் நடிப்பு அவரது அப்பாவை திரையில் காண்பது போலவே இருந்தது. அவருடன் உரையாடும் ஜேசன் சஞ்சய் ஆனந்த் சங்கரின் திரைக்கதை அமைப்பு உள்ளிட்ட கேள்விகளை முன்வைத்து பதில் பெறுகிறார். சமீபகாலமாக யூடியூபில் இரண்டு வீடியோக்களில் தோன்றியிருக்கும் ஜேசன் சஞ்சய் திரைத்துறையில் எப்போது கால்பதிப்பார் என ரசிகர்கள் கேள்வி வருகின்றனர்.

இந்நிலையில் அவர் இருமுகன் மற்றும் நோட்டா படத்தின் இயக்குனரான ஆனந்த் சங்கரை பேட்டி எடுத்துள்ளார். அவர் பேட்டி எடுக்கும் காணொளியை விஜய் ரசிகர்கள் வைரலாக பரப்பி வருகின்றனர். அந்த காணொளி இணையத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news