தளபதி 63 படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் – தெறிக்கவிட்ட ரசிகர்கள்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் தீபாவளி அன்று வெளியான திரைப்படம் சர்க்கார் ஆகும். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு ராதாரவி, பழ.கருப்பையா உள்பட பலர், முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை சன் பிக்சர் நிறுவனம் தயாரித்துள்ளது. சர்க்கார் படத்திற்கு ஏ.ஆர்.ரஹமான் இசையமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கி மற்றும் கத்தி படங்களை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் கூட்டணியில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் உள்ள சர்ச்சை காட்சிகள் நீக்கம், ஆளும் கட்சியின் எதிர்ப்பு என பல சர்ச்சைகள் எழுந்தாலும், அவை படத்தின் வசூலை பாதிக்கவில்லை. இந்நிலையில் தெறி மற்றும் மெர்சல் போன்ற வெற்றி படங்களை இயக்கிய அட்லி, மீண்டும் நடிகர் விஜயுடன் கைகோர்த்துள்ளார்.

வெற்றி கூட்டணியான தளபதி விஜய்-இயக்குனர் அட்லி, மூன்றாவது முறையாக விஜய்யின் 63வது படத்தில் இணைகிறார்கள் என்ற செய்தி வெளியானதும் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. தமிழ் திரையுலகின் முண்ணணி தயாரிப்பு-விநியோக நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்’, இம்மெகா பட்ஜெட் படத்தை தயாரிக்கிறது.

தற்போது இந்த படத்தில் நயன்தாரா தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக அதிகாரபூர்வமான அறிவிக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் இசைப்புயல் A R ரஹ்மான் இசையமைக்கிறார். மெர்சல், சர்க்கார் படங்களை தொடர்ந்து, இந்த படத்திலும் விவேக் அவர்கள் பாடல் வரிகளை எழுத இருக்கிறார். ஒளிப்பதிவு G K விஷ்ணு ,சண்டை பயிற்சி அனல் அரசு, படத்தொகுப்பு பணிகளை ஆண்டனி L ரூபன் செய்ய இருகிறார். இந்த படம் அடுத்த வருட தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news