சூர்யா – கேவி ஆனந்த் கூட்டணியில் உருவாகும் படத்தை பற்றிய ருசிகர தகவல் – விவரம் உள்ளே

நடிகர் சூர்யா, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு பிறகு கைவசம் செல்வராகவனின் NGK மற்றும் கே.வி.ஆனந்த் படம் என இரண்டு படங்கள் வைத்துள்ளார். இதில் ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனரான கே.வி.ஆனந்த் இயக்கும் படம் சூர்யாவின் கேரியரில் 37-வது படமாக அமைந்துள்ளது. இப்படத்தில் சூர்யா 4 வித்தியாசமான உருவமைப்பில் வலம் வரவுள்ளாராம்.

கதாநாயகியாக வனமகன் புகழ் சயிஷா நடிக்கிறார். இவர்களுடன் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால், பாலிவுட் நடிகர்கள் பொம்மன் இரானி சிராக் ஜனி, இயக்குநர் சமுத்திரக்கனி, ஆர்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்த படத்திற்கு எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்கிறார். பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்டனி படத்தொகுப்பாளராகவும், திலீப் சுப்பராயன் ஸ்டன்ட் இயக்குநராகவும் பணியாற்றுகிறார்கள். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் திலீப் சுப்பராயனின் பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது அனைவரும் அறிந்ததே.அப்போது, எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இன்னிலையில் இந்த படத்தை பற்றிய ருசிகர தகவல் ஓன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நடிகர் மோகன் லால் பிரதமராகவும், அவரது பாதுகாவலராக நடிகர் சூர்யா நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது. விரைவில் இந்த படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news