வெளியாவதற்கு முன்பே உலக சாதனையை உறுதி செய்த 2.0 திரைப்படம் – விவரம் உள்ளே

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் மிகுந்த பொருட்செலவில் உருவாகியுள்ள படம் 2.0. நீண்ட காலங்களாக இந்த படத்திற்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில் இந்த படத்தின் வெளியீடு தேதி மற்றும் டீசர் போன்றவை வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இந்த படம் வரும் நவம்பர் 29ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார். இவர்களுடன் சுதன்சு பாண்டே, ரியாஸ் கான், கலாபவன் உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர். இதுதவிர எந்திரன் படத்தில் சனா கதாபாத்திரத்தில் நடித்த, ஐஸ்வர்யா ராயும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என கூறப்படுகிறது. இந்த படம். எ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் லைக்கா ப்ரொடக்சனின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ளது. இப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் திரைக்கு வருகிறது.

மேலும் பல மொழிகளில் டப்பிங் செய்தும் வெளியிடுகின்றனர். இந்த படம் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் 10 ஆயிரம் தியேட்டர்களில் திரையிடப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தமிழ் திரையுலக வரலாற்றில் புதிய சாதனை என கூறப்படுகிறது. இதற்கு முன்பு எந்த தமிழ் படமும் இவ்வளவு தியேட்டர்களில் வெளியானது இல்லை. ஏற்கனவே 1991-ல் வெளியான ரஜினியின் தளபதி படம் வெளிநாடுகளில் முதல் தடவையாக 100 தியேட்டர்களில் வந்தது.

2007-ல் வெளியான சிவாஜி படம் 1000 தியேட்டர்களில் வெளியானது சாதனையாக பேசப்பட்டது. 2.0 இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.600 கோடி செலவில் தயாரான நேரடி தமிழ் படம். இந்திய திரையுலகில் முதல் முறையாக 3டி கேமராவில் முழு படத்தையும் எடுத்துள்ளனர். ஹாலிவுட் படங்களை போல் ஐமேக்ஸ் தியேட்டர்களில் 2.0 படத்தை திரையிட ஒப்பந்தம் செய்துள்ளனர்.

முதன் முறையாக 4டி ஒலி தொழில் நுட்பத்தில் இதன் ஒலி அமைப்பை உருவாக்கி உள்ளனர். இந்திய படங்கள் அனைத்தையும் பாகுபலி வசூலில் பின்னுக்கு தள்ளி உலக அளவில் பேசப்பட்டது. அதுபோல் 2.0 படமும் ஹாலிவுட் படங்களுக்கு நிகராக வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்டுகிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news