சீமானுக்கு ஆதரவாக சிம்பு ரசிகர்கள் – கடும் கோவத்தில் விஜய் ரசிகர்கள்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்திய பேச்சில் நடிகர் விஜயை விமர்சித்து கருத்து பதிவிட்டுள்ளார். சமீபத்தில் அவருடைய விஜய் பற்றின பேச்சுகள் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. சீமான் விஜய்யிடம் ஒரு கதையை சொல்லி வைத்திருந்தார். விஜய்யும் முன்பு நடிப்பதாக இருந்தது. ஆனால் நாட்கள் ஆக ஆக விஜய் வேறு வேறு படங்களில் நடித்ததால், சீமான் படத்தில் விஜயால் நடிக்க முடியவில்லை. மேலும் அதில் அதில் அதிகபடியாக அரசியல் வசனங்களும், சர்ச்சை காட்சிகளும் இருந்ததாக கூறப்படுகிறது.

அதன் காரணமாக விஜய் நடிக்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் வருத்தமடைந்த சீமான் சிம்புவிடம் இந்த கதையை சொல்லி இருக்கிறார். இதற்க்கு நடிகர் சிம்பு மறுப்பேதும் இன்றி நடிக்க சம்மதித்து இருக்கிறார். விஜய் படம் ரிலீஸ் ஆகும்போது ஏற்படும் பிரச்சினைகளால் விஜய் முதல்வரிடம் சந்திக்க நேரம் கேட்டு படத்தை ரிலீஸ் செய்ய உதவுமாறு கோரினார். இதனை சீமான் கிண்டலும் கேலியுமாக சொல்லி மேடையில் பேசி இருக்கிறார். மேலும் சிம்புதான் அடுத்த சூப்பர் ஸ்டார் எனவும் கூறியுள்ளார்.

இவரது இந்த பேச்சு விஜய் ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த விஜய் ரசிகர்கள் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை சமூக வலைதளத்தில் விமர்சித்து வருகின்றனர். அதற்க்கு தமிழ் தேசிய ஆதரவாளர்களும் சீமானுக்கு விஜய் ரசிகர்களை விமர்சித்து வருகின்றனர். சிம்புவின் ரசிகர்கள் சிலர் சீமானுக்கு ஆதரவாகவும், விஜய் ரசிகர்களுக்கு எதிராகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news