அஜித் ரசிகர்களுக்கு போட்டியா களத்தில் இறங்கிய ரஜினி ரசிகர்கள்

2.0 படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் படம் பேட்ட ஆகும். பேட்ட படத்தில் ரஜினிகாந்துடன், சிம்ரன், த்ரிஷா, விஜய்சேதுபதி, சசிகுமார், பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என பலர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது. இப்படத்தை மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் நிறுவனம் இந்தியாவை தவிர உலகமெங்கும் வெளியிடும் உரிமையை பெற்றுள்ளது.

இந்நிறுவனத்தின் விளம்பர யுக்தியை கண்டு உலக மக்கள் பலரும் வியந்து போய் உள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற ட்ரிப்ட் சேலஞ்ச் 2018 (DRIFT Challenge 2018) கார் ரேசில் பேட்ட படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்ட கார் வெகுவாக ரசிகர்களை கவர்ந்தது. மேலும் மலேசியாவில் பல கார்களில் பேட்ட படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அதுபோல் பேருந்துகளில் ஒட்டப்பட்ட போஸ்டர் அதிக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தற்போது மலேசியாவின் முக்கிய வீதிகளிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வீடியோக்கள் ஒளிபரப்பட்டு வருகிறது. மலேசியாவில் நடைபெற்ற விழாவில் ‘பேட்ட’ படங்கள் பொறிக்கப்பட்ட டி-சர்ட் அறிமுகம் செய்யப்பட்டது.

மலேசியாவில் 140 திரையரங்குகளில் பேட்ட திரைப்படம் வெளியாக உள்ளது. மேலும் உல்லாலா பாடலை மலாய் பாடகர்கள் அஸ்வான், முவாட்ஸ் இருவரும் தமிழ்மொழியில் பாடி அசத்தியுள்ளனர். தற்போது, இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. இதே போல் தல ரசிகர்கள் மலேசியாவில் பெரும் திரளாக புல்லட் பைக்கில் விஸ்வாசம் படத்தின் புகைப்படம் அடங்கிய கொடியயுடன் ரசிகர்கள் வளம் வந்தது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news