ஹிப் ஹாப் தமிழன் ஆதிக்கு குவியும் பாராட்டுக்கள் – விவரம் உள்ளே

ஹிப்ஹாப் தமிழா என்கிற ஆதி ஆம்பள படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார். திரைத்துறைக்கு வரும் முன்னர் இவர் பல ஆல்பம் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். இவர்கள் இந்தியாவில் தமிழ் சொல்லிசையின் [hip hop] முன்னோடி இசைக்குழுக்களில் ஒன்றாக கருதப்படுகிறார்கள். இவர் நமக்கு யூ டியூப் வாயிலாக அறிமுகமாகி பின்னர் பாடகர், இசையமைப்பாளர், நடிகர், இயக்குனர் என படிபடியாக வளர்ந்தவர். இவர் நடிப்பில் நட்பே துணை என்ற அடுத்த பாடல் வெளியாக உள்ளது.

படம் , பாடல்களை தொடர்ந்து தற்பொழுது டாகுமெண்டரி ஒன்றை இசை அமைத்து தயாரித்து உள்ளார். தமிழி அல்லது தமிழ்ப் பிராமி என்பது பண்டைக்காலத்தில் தமிழ் எழுத்துக்களை எழுதப் பயன்பட்ட ஒலிப்பியல் எழுத்து முறைமை. தமிழ் எழுத்து முறை என்னென்ன பரிமாணங்களை கடந்து இன்றைய இந்த நிலைய அடைந்துள்ளது என்பதனை 8 அத்தியாயங்களாக வந்துள்ளது என்பதை, ஆதாரத்துடன் வெளியிடுவதே இதன் முயற்சி. 2 வருட உழைப்பு, 14000 பயணம் என இந்த குழுவின் உழைப்பு இதில் அடங்கும். தமிழின் வரலாற்றை முன்னிலைபடுத்தி எடுத்துள்ள தமிழி ட்ரைலர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழ் எழுத்துக்களின் தொன்மையும் அதன் சிறப்பையும் சொல்லும் ஒரு உணர்வு பூர்வமான ஆக்க பூர்வமான ஆராய்ச்சி. தமிழ் மொழிக்கான இந்த எழுத்துக்கள் எங்கிருந்து உருவாகியிருக்கும் ? வெளிவராத உண்மையான வரலாறு. தமிழர்கள் அனைவரும் கண்டிப்பாக பகிர வேண்டும். நல்ல முயற்சிக்கு வாழ்த்துகள் என பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த தமிழி முன்னோட்ட்ட காணொளியை தற்போது வரை 12 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news