இளம் நடிகருடன் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கும் பாரதிராஜா

தரமணி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் வஸந்த் ரவி. ராம் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் ஆண்ட்ரியாவும், அஞ்சலியும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தனர். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான இந்தப் படம், 2017-ம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தரமணி படத்தைத் தொடர்ந்து வஸந்த் ரவி ஹீரோவாக நடிக்கும் படம் ராக்கி. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இந்தப் படத்தை இயக்குகிறார் அருண் மாதேஸ்வரன். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு, தர்புகா சிவா இசையமைக்கிறார். இந்தப் படத்தில் இயக்குநர் பாரதிராஜா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறா. அதுவும் நேர்மறையான [வில்லனாக] கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என கூறப்படுகிறது.

பாண்டிய நாடு படத்தில் பயந்த சுபாவம் கொண்டவராகவும், குரங்கு பொம்மை படத்தில் வெகுளியாகவும் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் பாரதிராஜா. அவர் தற்போது வில்லன் கதாபாத்திரம் ஏற்றிருப்பதால், இந்தப் படத்துக்கு இப்போதே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. விரைவில் இந்த படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news