பட வாய்ப்பில்லாமல் மெரினாவில் கைக்குட்டை விற்கும் நகைசுவை நடிகை கே.ஆர்.ரங்கம்மாள்

தமிழ் திரைப்படங்களில் நடிகர் வடிவேலுவுடன் இணைந்து பல்வேறு படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தவர், பிரபலமானவர் கே.ஆர்.ரங்கம்மாள் ஆகும். சென்னை வடபழனி குமரன்காலனியில் வசித்து வருகிறார். ஆனால் இன்று பட வாய்ப்புகள் இல்லாமல் வறுமையில் வாடுகிறார். பிள்ளைகள் பல பெற்றிருந்தும், வயிற்று பிழைப்புக்காக சென்னை மெரினா கடற்கரையில் கைக்குட்டை விற்று காலத்தை போக்கி வருகிறார்.

கடற்கரைக்கு வருவோர் இவரை அடையாளம் கண்டுகொண்டு அவருடன் புகைப்படம் எடுத்து செல்கின்றனர். இவர் பல வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறார். இவர் எம்.ஜி.ஆர் ரஜினிகாந்த் கமல்ஹாசன் மற்றும் இன்றைய முன்னணி நடிகர்கள் அஜித் விஜய் இவர்களுடனும் நடித்தவர்.

ஆனால் இன்று அவர் நிலைமை மிகவும் பரிதாபத்துக்கு உரியது 100, 200 என்று சம்பளம் வாங்கிய அவர் இன்று மெரினா பீச்சில் 5ரூபாய்க்கும், 10 ரூபாய்க்கும் கர்ச்சீப் விற்று வயிற்றைக் கழுவிக்கொண்டிருக்கிறார். ரங்கம்மாள் தன்னிடம் புகைப்படம் எடுக்க விரும்பு ரசிகர்களிடம், ஏதாவது பொருள் வாங்கி செல்லுமாறும் வேண்டுகோள் வைக்கிறார். இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news